spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅன்பார்ந்த வாடிக்கையாள வாக்காளர்களே... உங்கள் சிந்தனைக்கு..

அன்பார்ந்த வாடிக்கையாள வாக்காளர்களே… உங்கள் சிந்தனைக்கு..

- Advertisement -

நான் உள்ளபடியே எந்த ஒரு அரசியல் கட்சியோடும் தொடர்புடையவன் அல்ல என்றாலும் மத்திய அரசு என்று வரும் வேளையில், மதம், சாதி என்பன போன்ற பாகுபாடுகளை எல்லாம் தாண்டி தன்னலமற்ற, நாட்டு நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த, தொலைநோக்கு உடைய தலைவர் கொண்ட கட்சிக்கே நாம் நமது வாக்கை அளிக்க வேண்டும் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

அவர் கண்டிப்பு நிறைந்த மனிதராக இருக்க வேண்டும், இல்லை யென்றால் நாடு தன் இலக்கை அடைவது இயலாத காரியம்.

இந்தத் தகவல் கோல்காத்தாவின் ஒரு வழக்குரைஞரின் மனதின் குரல், இதனை நான் என் மனதின் குரலாக அளிக்க முயற்சி செய்திருக்கிறேன்.

2019 பொதுத் தேர்தல்கள் –
பா.ஜ.க + ஆர்.எஸ்.எஸ் + ரிபப்ளிக் டிவி + ஜீ டிவி + சிவசேனை + ஐக்கிய ஜனதா தளம் + அகாளி தளம் + அதிமுக+–
இவற்றுக்கு எதிராக,
காங்கிரஸ்+இடதுசாரிகள்+பகுஜன் சமாஜ் கட்சி+சமாஜ்வாதி கட்சி+தெலுகு தேசம்+ராஷ்ட்ரீய ஜனதா தளம்+என்டி டிவி+ஏபிபி ந்யூஸ்+ஸ்க்ரால்+தி வயர்+அவார்ட் வாபிசி கும்பல்+ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்+அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்+பாகிஸ்தானம்+ சீனா + இத்யாதி இத்யாதி

உங்களுக்கு நேரம், பொறுமை, படிக்கும் நாட்டம் ஆகியன இருக்கையில் இதை நீங்கள் படிக்கலாம், உங்களுக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம், ஆனால் தயவு செய்து கண்டிப்பாகப் படியுங்கள்.

இந்துக்களும் சரி, இஸ்லாமியர்களும் சரி இருவருமே மோதியை அகற்ற விரும்புகிறார்கள் ஆனால் காரணங்கள் வேறு:
ஹிந்துக்களுக்கு ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலைகள் ஆகியன வருத்தமளிக்கின்றன என்பதால் காங்கிரஸ் மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதே வேளையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் காங்கிரஸ் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்; அப்போது தான் இந்த நாட்டிலிருந்து சனாதன தர்மத்தை மெல்ல விரட்ட முடியும்.

காரணம் எதுவாக இருந்தாலும், இவர்கள் அனைவரின் முடிந்த இலக்கு ஒன்று தான்.
தனிப் பட்ட ரீதியாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர் களும் அர்ப்பணிப்பு நிறைந்த குடிமக்களாகவும் இருக்கலாம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியா தேங்கியிருக்க வேண்டும் என்று விரும்பும் அந்நிய சக்திகளின் உதவியால் தழைத்து வரும் அவர்களின் சமயத் தலைவர்களின் துர் போதனையால் மூளைச்சலவை செய்யப் பட்டிருக் கின்றார்கள்.

அவர்கள் சமீப ஆண்டுகளில் அதிக பதட்டமும் கலவரமும் அடைந்திருக் கின்றார்கள்; ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பற்றிய கருத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதே இதன் காரணம்.

இப்படிப்பட்ட ஊழல் மலிந்தவர் களால் பல இந்தியர்கள் மூளைச்சலவை செய்யப் பட்டிருக் கிறார்கள், அவர்கள் நரேந்திர மோதிக்கு எதிராக இருக்கிறார்கள்.

ஒரு மக்களாட்சி முறையில், எதிர்ப்பு தெரிவிப்பது என்பது தவறில்லை என்பதோடு அனைவரின் உரிமையும் கூட; ஆனால் மோதியை எதிர்க்கும் அதே வேளையில் யாருக்கு ஆதரவாக நீங்கள் செயல் படுகிறீர்கள்? இது ஒரு முக்கியமான விஷயமாகிறது என்பதால் தான் இது பற்றி முனைப்புடனும் மும்முரமாகவும் சிந்தித்த பிறகு நீங்கள் ஒரு தீர்மானம் மேற்கொள்வது முக்கியமானதாகும் என்று நான் கருதுகிறேன்.

முலாயமாகட்டும், லாலுவாகட்டும், மாயாவதி யாகட்டும், சோனியா வாகட்டும், ராஹுலாகட்டும், கேஜ்ரிவாலாகட்டும், மம்தா பேனர்ஜியாகட்டும், இடதுசாரிக ளாகட்டும் – இவர்கள் அனைவரும் மோதியை விடச் சிறந்தவர்களா? அல்லது இவர்களின் செயல்பாடுகள் மோதியினுடையதை விடச் சிறப்பானதாக இருந்திருக்கின்றதா? உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

மம்தா பேனர்ஜி, அகிலேஷ் யாதவ் இன்னும் பிறரும், குஜராத் மாநில முதல்வராக மோதி செயல்பட்டதை விடச் சிறப்பான முதல்வர்களாகச் செயல்பட்டிருக்கின்றார்களா?

வளர்ச்சியை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றால், குஜராத்தின் எந்த ஒரு நகரத்துக்கோ டவுனுக்கோ சென்று, பிறரின் மாநில தலைநகரத்தில் காணப்படுவதோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

லாலுவும் முலாயமும் அரசியலில் நுழைந்த வேளையில் அவர்கள் வருமானம் எத்தனை குறைவானதாக இருந்தது என்றால், அவர்களால் ஒரு லாந்தர் விளக்கையோ, ஒரு சைக்கிளையோ கூட வாங்க முடியாத நிலை.

சாதி அரசியலின் பெயரால் இன்று இவர்கள் கணக்கற்ற கோடிகளை ஈட்டியிருக்கின்றார்கள். ராம்கோபால் யாதவ் அவருக்கென பணியமர்த்தப்பட்ட பிரத்யேக விமானத்தில் பயணிக்கிறார். ஷிவ்பால் யாதவ் பகட்டான ஔடி காரில் வலம் வருகிறார்.

இத்தனை பெரிய பணமும் வளமும் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இவர்களா மோதியை விடச் சிறந்தவர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

சோனியா, ராஹுல், ப்ரியங்கா, ராபர்ட் வாட்ரா ஆகியோர் எல்லாம் இன்று உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இருப்பவர்கள். இவர்களா மோதியை விடச் சிறந்தவர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

35 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்ட இடதுசாரிகளா மோதியை விடச் சிறந்தவர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

இலவச வைஃபை, சிசிடிவி, 150 கல்லூரிகள், 500 பள்ளிகள் ஆகியவற்றை அளிப்பதாகப் பொய்யான வாக்குறுதியை அளித்து, 5 ஆண்டுகளாக தில்லி மக்களை விளம்பரங்கள் வாயிலாக ஏமாற்றி வரும் கேஜ்ரிவாலா மோதியை விடச் சிறந்தவர்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

நம் தமிழ்நாட்டின் அரசகுடும்பம் பற்றி நான் கூறியா உங்களுக்குத் தெரிய வேண்டும்? திருக்குவளை ரயில் பயணம் தொடங்கி, முத்தமிழ் விற்று வியாபாரம் செய்து இன்று உலகப் பணக்காரர்கள் வரிசையிலே இவர்களின் பரந்துபட்ட குடும்பத்தார் தான் முதல் 5 இடங்களில் இருக்கும் அளவுக்குச் செல்வக் கடலில் நீந்திக் கொண்டிப்பவர்கள் தான் கருணாநிதி குடும்பத்தார். தமிழ் நாட்டு மக்களுக்குச் செய்த துரோகங்கள் எல்லாம் போதாது என்று இலங்கைவாழ் தமிழ்ச் சொந்தங்களுக்கும் முடிவு கட்டி அவர்களின் ஒப்பாரியிலும் ஓலத்திலும் உல்லாச வாழ்வு தேடிக் கொண்ட காங்கிரசும் தி.மு.க வும் இன்று கைகோர்த்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் வலம் வருகின்றன.

இவர்கள் ஊழலில் மட்டுமா கைகோர்த்துக் கொண்டிருக் கிறார்கள், கொலை பாதகத்திலும் அல்லவா கூட்டுக் களவாணிகளாக இருந்திருக்கின்றார்கள்!! இவர்களா மோதியை விடச் சிறந்தவர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

மாயாவதி அரசியலில் இணைந்த போது, கான்ஷிராமும் இவரும் சைக்கிள்களில் பயணிப்பார்கள். தனது வீட்டில் விளக்கேற்ற எண்ணை வாங்கக்கூட முடியாத நிலையில் இருந்தார் மாயாவதி. இன்று அவரது காலணிகள்கூட அயல்நாடுகளிலிருந்து வருகின்றன. அவரது சகோதரர் 497 நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்.

இவர்களா மோதியை விடச் சிறந்தவர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!! உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!!

கஷ்மீரத்திலிருந்து 5 இலட்சம் கஷ்மீர ஹிந்துக்கள் விரட்டி விடப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் போது யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

இதை தில்லி அரசும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் பர்மாவிலிருந்தும் பங்க்ளாதேசத்திலிருந்தும் ஊடுருவும் ரோஹிங்க்யா அகதிகளுக்கு ஆதரவாக ஏகப்பட்ட குரல்கள் எழுகின்றன. இதைப் பற்றிச் சிந்தியுங்கள் சகோதரர்களே!!

ஜம்முவில் இருக்கும் அகதிகள் முகாமிற்குச் சொல்லுங்கள், 1990 ஆம் ஆண்டும் முதல் அங்கே வாடிக் கொண்டிருக்கும் கஷ்மீரத்து பண்டிட்டுகளில் அவலநிலையைப் பாருங்கள்.

உங்கள் மனங்களில் இருக்கும் முரண்கள் உங்களைச் சுடும், உண்மை உங்களுக்குச் சட்டென விளங்கும்.!!

மோதியை எதிர்ப்பவர்கள் தாராளமாக எதிர்க்கட்டும், ஆனால் அவர்களிடம் இதைவிடச் சிறப்பான தீர்வு ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தது என்றால், அவர்கள் நாட்டின் முன்பாக அதை வைக்கட்டும்.

உங்கள் தாய்நாடு பற்றி சற்றேனும் சிந்தித்துப் பாருங்கள்; இன்னும் எத்தனை ஆண்டுகள் அது கொள்ளையடிக்கப்பட வேண்டும், பிற நாடுகளால் சுரண்டப்பட வேண்டும் என்று தீர்மானியுங்கள்.

நமக்குள் இருக்கும் சாதி-சமய-பிரிவுகள் போன்ற வேறுபாடுகளை மறக்க வேண்டிய தருணம் இது. கொள்ளையடிப்போர் இன்று நிலவும் சாதி சமய வேறுபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன, ஏன் தெரியுமா?

ஏனென்றால் ஊழலும் கருப்புப் பணமும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் அனைவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று இந்தக் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் கொள்ளையடிக்கலாம், கையூட்டு வாங்கலாம், சமூகங்களுக்கு இடையில் சண்டைகளை மூட்டி விடலாம், ஆனால் சி.பி.ஐ. அவர்களைக் கேள்வியே கேட்கக் கூடாது. குடிமக்கள் என்ற முறையில் இப்படிப்பட்ட குண்டர்களா நம் நாட்டை ஆள அனுமதிப்பது?
உங்கள் இதயங்களைத் தொட்டுப் பாருங்கள் சகோதரர்களே…

அப்துல் கலாமைப் போல, மோதியும் இந்தியாவுக்கே தன்னை அர்ப்பணித்த தன்னலமற்ற ஒரு மனிதன் என்பதை உங்கள் மனச்சாட்சி உங்களிடம் உரக்கச் சொல்லும், அது உங்கள் காதுகளிலும் ஓங்கி ஒலிக்கும்.

எனக்கு மோதியை ஏன் பிடித்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது, ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தி.மு.க. போன்ற பிற கயவாளிக் கட்சிகளை நான் வெறுக்கிறேன் என்பது உண்மை.

நல்ல நாட்கள் (அச்சே தின்) வருமா வராதா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மோதியைத் தவிர, அப்படிப்பட்ட ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு அரசியல்வாதியையும் என்னால் இன்று காண முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி ராஹுலைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிக்கிறது; ஏனென்றால் மூளையில்லாத ஒரு கைப்பாவை அவர் என்பதை அவர்கள் அனைவருமே அறிவார்கள். அப்புறமென்ன, அவர் ஆட்சிக்கு வர நேர்ந்தால், ஊழல் கச்சேரி அமோகமாக அரங்கேறுமே!

மோதியால் இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பு நிறைந்த நாடாக ஆக்க முடியுமா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மகத்தான நாடாக, உலகத்துக்கே தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை ஆக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வார் அவர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

நாட்டின் குடிமக்களாகவும், வாக்காளர்களாகவும், அரசாங்கம் நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் அமல்செய்ய நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் அதுவே போதுமானது.

இந்திய வரலாறு பற்றி மோதிக்கு முழுமையான அறிவு இருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை; ஆனால் நமது எதிர்காலம் பற்றிய தெளிவான தொலைநோக்குப் பார்வை அவரிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

இறைவன் நமக்களித்த மிகப்பெரிய கொடையான பகுத்தறிவை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை அந்த ஆண்டவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என் ரத்த உறவுகளே!!

இந்தப் பகுத்தறிவை, இந்த ஆழமான புத்திசாலித்தனத்தை, இந்தப் புரிதலை, இந்த மதிநுட்பத்தை நாம் நமக்காக மட்டுமே பயன்படுத்த இருக்கிறோமா அல்லது நமது தாய்த்திருநாட்டிற்காகப் பயன் படுத்தப் போகிறோமா என்ற நம் ஒவ்வொருவரின் முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தீர்மானங்களுக்கும் அந்தப் பரம்பொருளே சாட்சி.

நமது தாய்த் திருநாட்டிற்கு ஆக்கப்பூர்வமான ஒரு பங்களிப்பை, மகத்தான அர்ப்பணிப்பை அளிக்க வேண்டிய மகத்தான தருணம் இது.

நாடாகட்டும், தனிமனிதன் ஆகட்டும்…. ஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனை(கள்) ஏற்படும்; இது நமது நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இதுவரை காணாத பெரும் திருப்புமுனை, ஒரு நாற்சந்திப்பு. நாம் எடுக்கும் முடிவு நம்மையும் நாட்டையும் பாதிக்கக் கூடியது, நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

இது வாழ்வா சாவா என்ற ஒரு நிலை. நாம் நல்லோர் தரப்பில் இருக்கிறோமா, நயவஞ்சகர் தரப்புக்கு வலு சேர்க்கிறோமா என்பதை இந்த பாண்டவ-கௌரவ குருக்ஷேத்திர யுத்தம் தீர்மானம் செய்யும். மோதியா? முடைநாற்றப் பெருச்சாளிகளா? தேசமா? துரோகிகளா?

முடிவு உங்கள் விரல்களில்…. ஆண்டவன் சந்நிதியில்…..
என் கருத்துக்களோடு உங்களுக்கு ஒத்திசைவு இருந்தால், அணுவளவேனும் என் பங்களிப்பை நான் அளித்தமைக்கு மகிழ்ச்சி அடைவேன்.

பெருமிதம் நிறைந்த என் இந்தியச் சகோதரர்கள் பிறருக்கு இந்த உணர்வை நீங்கள் பகிர்ந்து கொண்டால் என் நன்றிகளைக் காணிக்கையாக்குவேன்.

நாட்டை பலப்படுத்த மீண்டும் ஒரு 5 ஆண்டுகள் மக்கள் நாயகன் மோதிக்கு அளிப்போம், நமக்கே அளித்துக் கொள்வோம்.
உங்கள் பொன்னான நேரத்தை அளித்தமைக்கு நன்றிகள்.
வாழ்க பாரதம்!!!

  • விஸ்வாமித்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe