மோடி என்ற ‘காவல்கார’னால் துரத்தப் படும் ராகுல் என்ற ‘திருடன்’!

மோடிஜிய கண்டாலே பிடிக்காட்டி போயிட்டு போவுது. அதுக்காக ராகுல்ஜிக்கு வோட்டு போடறதுக்கு முன்னாடி அவர் என்னாத்துக்கு ஜாமீன்ல இருக்காருன்னு முதல்ல தெரிஞ்சி வச்சிக்கோங்க.

முதல்ல ஒரு ஃபிளாஷ்பேக் போவோம். 1937 ம் வருஷம். நேருஜியும் 2000 சுதந்திர போராட்ட வீரர்களும் சேர்ந்து அன்னைய மதிப்புல அஞ்சு லட்ச ரூபா முதல் போட்டு Associated Journal ltd அப்படின்னு ஒரு செய்தி நிறுவனம் ஆரம்பிச்சாங்க.

அந்த நிறுவனத்துடைய நோக்கம் செய்திகளை பல மொழிகள்ல ஜனங்க கிட்ட கொண்டு போயி சேக்கறது. உருப்படாத சோஷலிச சித்தாந்தப்படி அதுக்கு ஓனருன்னு யாரும் கிடையாது. மக்களுடைய நேர்மைய மட்டும் நம்பியே செயல்பட ஆரம்பிச்சுது.

ஆரம்பத்துல தேசபக்தர்கள் நேர்மையான உழைப்புனால முன்னேறிய நிறுவனம் National Heraldங்கற பேருல ஆங்கில பத்திரிகை ஒண்ணு, ஹிந்தில ஒண்ணு, உருதுல ஒண்ணுன்னு படிப்படியா முன்னேறி பல ஊர்கள்ல கிளை பரப்ப ஆரம்பிச்சுது. அந்தந்த ஊர்ல சொத்துகள் வாங்கி போட ஆரம்பிச்சாங்க.

சுதந்திரத்துக்கு அப்புறம் ஓனரே இல்லாத அந்த நிறுவனம் மெல்ல மெல்ல உருப்படாத சோஷியலிச சித்தாந்த விதிப்படி விற்பனைய பத்தியும் கவலைப்படாம செலவை கட்டுப்படுத்தறதை பத்தியும் கவலைப்படாம போறவன் வர்றவனுக்கெல்லாம் வேலையையும் சம்பளத்தையும் வாரி வாரி விட்டு உருப்படாம போவ ஆரம்பிச்சுது.

நஷ்டம் மேல நஷ்டம். கடன் கட்டுக்கடங்காம போக ஆரம்பிச்சுது. ஓகே இப்பொ ஃபிளாஷ்பேக்கை 2010 வருஷத்துக்கு கொண்டு வருவோம்.

இப்பொ என்ன நிலவரம். முதலீடு போட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் 99% பேர் மேலோகம் போயி சேந்துட்டாங்க. ஒரு சில போராட்ட தியாகிகள் மட்டும் ஷேர்களை வாரிசுக்கு குடுத்திருந்தாங்க.

மத்தவங்க தேசத்துக்காக குடுத்தது அதை நாம திரும்ப கேக்க கூடாதுன்னு ஏற்கனவே விட்டுட்டாங்க. கம்பெனியோ 90 கோடி ரூபா கடன்ல சம்பளம் கூட போட வழியில்லாம திண்டாடடுது. ஆனா அஞ்சாயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு.

ஒரு வகையில கிட்டதட்ட கேட்பாரில்லாத சொத்து. இப்பொ தான் நம்ம நேர்மையின் சின்னம் இந்தியாவை காப்பாத்தறதுக்காகவே அவதாரம் எடுத்த அன்னை சோனியா என்ட்ரி ஆவறாங்க. இந்த பிள்ளையில்லாத சொத்தை என்ன பண்ணலாம்னு திங்க் பண்றாங்க.

எல்லாரையும் கூப்புட்டு கலந்து பேசி நல்லா யோசிச்சி ஒரு மாபெரும் தியாகம் பண்றாங்க. என்னா தியாகம்.?

காங்கிரஸ் கட்சி சார்பா 90 கோடி ரூபா அந்த நிறுவனத்துக்கு வட்டியில்லா கடன் குடுக்கறாங்க. நல்ல விஷயம் தானேன்னு நினைக்கறீங்களா? இனி தான் இருக்கு ட்விஸ்ட்டே.

முதல்ல கடன் வாங்குன அந்த நிறுவனம் ஐயய்யோ எங்களுக்கு கடனை திருப்பி அடைக்கவே வக்கில்லைன்னு அழுவுது. நம்ம சோனியாம்மா தான் இந்தியாவையே காபந்து பண்ண அவதரிச்சவங்களாச்சே. சுதந்திர போராட்ட தியாகிகள் சொத்தை விட்டுடுவாங்களா என்ன.?

முதல்ல ஒரு அம்பது லட்ச ரூபா சொந்த முதல் ரெடி பண்றாங்க. பண்ணி Young India ன்னு ஒரு கம்பெனி ஆரம்பிக்கறாங்க. Young Indiaல சோனியாம்மாவுக்கும் அவங்க புள்ள ராகுல்ஜிக்கும் 75% ஷேர் அகமது படேல் உட்பட மற்ற சில காங்கிரஸ் தலைகளுக்கு 25% ஷேர். ஓகே. இப்பொ அந்த கடன்கார நிறுவனத்தை கூப்புட்டு உனக்கு காங்கிரஸ் குடுத்த 90 கோடி கடனை அடைக்க வக்கில்லன்னா

அம்பது லட்ச ரூபா பணம் வாங்கிகிட்டு Young India வுக்கு வித்துட்டு போன்னு சொல்றாங்க. ஓனரே இல்லாத கம்பெனியாச்சே. பங்குதாரர் எல்லாம் பரலோகம் வேற போயி சேந்துட்டாங்களா. யாரு கிட்டயும் விக்கறதுக்கு அனுமதி கேக்க வேண்டியதில்லாம போச்சி.

அந்த நிறுவனத்துடைய எம்டி மோதிலால் வோராவே முடிவெடுத்து சோனியாம்மா கம்பெனிக்கு வித்துடறாரு. 90 கோடி கடனும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய 5000 கோடி சொத்தும் சோனியாம்மா கைக்கு வந்தாச்சு.

இத்தோட கமுக்கமா விட்டிருந்தா கூட மாட்டி இருக்க மாட்டாங்க. அவங்க பேராசை அந்த 90 கோடியையும் காங்கிரஸ் தலைல தடவி விட்டாங்க.

காங். காரிய கமிட்டிய கூட்டி National Herald சுதந்திர போராட்டத்துக்கு நிறைய உதவி இருக்கறதால அந்த 90 கோடி கடனை காங்கிரஸ் தள்ளுபடி பண்றதுன்னு தீர்மானம் போட்டாங்க. அவங்களை பிடிச்ச கிரகம் இந்த கோல்மால் சு.சாமி கண்ல பட்டு தொலைச்சி அவரு கோர்ட்ல கேஸ் போட்டுட்டாரு

சுதந்திர போராட்ட தியாகிகள் சொத்தை சோனியாஜியும் ராகுல்ஜியும் ஆட்டைய போட்டுட்டாங்கன்னு. அந்த கேஸ்ல தான் அம்மாஜியும் புள்ளஜியும் ஜாமீன் வாங்கி வெளியே சுத்திகிட்டு இருக்காங்க.

சாதாரணமா வெளில பாத்துருக்கலாம்… திருடன் தான் போலீஸ்காரனைக் கண்டா… சலாம் போடுவான். கை கொடுப்பான். சிரிச்சிக்கிட்டே போயி நெருக்கமா இருப்பான். ஏன்னா… அடுத்து ஏதாவது மாட்டிக்கிட்டா..! இப்போ ராகுல் என்ற திருடன் ஏன் மோடி என்ற காவல்காரனைக் கட்டிப்பிடிச்சான்னு.. தெரியுதா?!

  • யாரோ
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...