பொண்ணுங்க துப்பாக்கி வெச்சிருக்கிற அளவுக்கு நிலைமை மோசம்ன்றதுலாம் ரொம்பவும் ஒவர் சீன் சார்..

பெண்கள் சிக்கிக்கிற விவாகரத்துல ஆண்கள்தான் பெரும்பாலும் மெயின் அக்கியூஸ்ட்டுங்க.. பெண்கள் உடந்தை கேட்டகிரிதான்..

ஆனா திட்டம்போட்டு வேட்டையாடுறவனைவிட, ஏமாந்து போறதுக்குன்னே இருக்கிற பெண்கள்தான் எப்பவுமே ஜாஸ்தி..அது அத்தனையும் ஆர்வக் கோளாறு அலப்பறைங்க..

நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்கன்னு ஒருத்தன் சொன்னா,என்ன பண்ணனும்? ஒன்னு கண்டுக்காம போயிடணும். இல்லைன்னா, நான் அழகா இருந்தா உனக்கென்ன? உன் வேலைய மட்டும் நீ பாருன்னு சொல்லணும்.

நீ சொல்ற அளவுக்கு நான் ஓன்னும் அப்படி அழகு கிடையாதுன்னு உலகத்துல எந்த லேடியும் சொல்லமாட்டாங்கன்றது வேற கதை..

அழகா இருக்கீங்கன்னு சொன்னா போதும். உடனே நீ எதை வெச்சி சொல்றே? நானா, என் டிரெஸ்சா, இல்லை மேக்கப்பான்னு வாண்டனா ஒருத்தனை வண்டியில ஏத்திக்கிறது..

அவன் திருத்தமோ யோசனையோ சொன்னா, மறுநாளே அதை சரிபண்ணிகிட்டு அவன் பார்வையில படறது. இல்லைன்னா இப்ப ஓக்கேவான்னு நேரடியாவே கேக்கறது..

தமிழன் படத்துல ஹீரோ விஜய் ஒரு பிப்டி ப்ளஸ் ஜட்ஜ்ம்மாவ பார்த்து லிப்ஸ்டிக் தூக்கலா இருக்குன்னு ஜாடையில சொல்லுவாரு..அது உடனே மெனக்கெட்டு போய் ரெஸ்ட்ரூம்ல கரக்ட் பண்ணிகிட்டுவந்து புள்ள வயசு இருக்கிற விஜய்கிட்டயே காட்டிட்டு, இப்போ ஓக்கேவான்னு கேக்கும்..

இன்னொரு சமாச்சாரம்…அது அவங்க பொண்ணுன்னு நல்லா தெரிஞ்சிகிட்டே நம்மாளு அந்தம்மாகிட்ட கேப்பான்,.ஏன்ங்க இவங்க உங்க தங்கச்சியான்னு?

அதை கேட்டதும் அப்படியே அதுக்கு குளுகுளுன்னு ஆயிடும். சிலருதான், இல்லைங்க அது பொண்ணுன் னு சொல்வாங்க.. பலபேரு, சிஸ்டராவே எதிராளி மனசில மெயின்டெயின் ஆகட்டும்னு நாசூக்கா பதில் சொல்லாமலேயே ஸ்கிப் பண்ணிடுவாங்க..

ஒன்னு வேணாம்.. உன்னை ஒருத்தன் லவ் பண்றா மாதிரியே கேட்டுட்டு போனான்டின்னு ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட சொல்லி பாக்கட்டுமே?

காதுல கேட்ட பொண்ண என்ன செய்யணும்? எவன் என்னை லவ் பண்ணா எனக்கென்னடின்னு போய் கிட்டே இருக்கணும்.. அப்படி போகுமா போகாது.
உடனே அவன் யாருடி எப்படி இருப்பான்னு நோண்டிக் கிட்டே போவும்.

தனுஷோட திருவிளையாடல் ஆரம்பம் படத்துல தங்கச்சி ஸ்ரேயாவுக்கு அண்ணன் பிரகாஷ்ராஜ் இப்படித்தான் எவனோ ஒரு கிறுக்குப்பய் உன்னை லவ் பண்றதா எங்கிட்டயே சொல்லிட்டு போறாம்மான்னு சொல்லப்போக, அவன் யாருடான்னு ஸ்ரேயா நோண்ட ஆரம்பச்சி லவ்வுக்கே போயிடும்..

வயசு பொண்ணுங்களோ, நடுத்தர வயது பொம்பளைங்களோ, இந்த ஆர்வக்கோளாறு புத்தியை யும், ஒருத்தன் புகழ்ந்தா உடனே அவன் கிட்ட ஓரடி முன்னே வைக்கிற புத்தியையும் தள்ளிவெச்சாலே போதும்.. பிரச்சினைகளே அவர்களை அண்டாது..

உங்களுக்கு ஒன்னு தெரியமா சார்? குலேபகாவலி படத்துல எம்ஜிஆர் சொல்லுவாரு, அழகு விஷயத்தில் ஆண்கள் புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.. மயங்கும் புத்தி பெண்களுக்கு மட்டுமே இருப்பதால்தான் புலவர்களும் கவிஞர்களும் ஓயாமல் பெண்களையே வர்ணிக்கிறார்கள்ன்னு.!

– ஏழுமலை வேங்கடேசன் (மூத்த ஊடகவியலாளர்)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...