23/10/2019 9:04 PM
உரத்த சிந்தனை நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்!

நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்!

-

- Advertisment -
- Advertisement -

நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்…

நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு MBBS படித்தேன் என்றும்… இன்று நீட் தேர்வு பற்றி எவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.!

என் தந்தை ஒரு டாக்டர்.. ஒரு சிறிய மருத்துவமனை வைத்து நடத்துகிறார். நான் முதல் மகள். என்னை நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதலே சேர்த்து படிக்க வைத்தார்.

நான் டாக்டராக வேண்டும் என்பது அவர் கனவு. நான் நன்கு பாடங்களை புரிந்து கொண்டு படிக்கும் மாணவி .

நான் மருத்துவத்தை தினமும் பார்த்தவள். எனக்கு தந்தை அறிவை ஊட்டி வளர்த்தார் ஆனாலும் பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை.

காரணம் நான் படித்த பள்ளியில் மனப்பாடம் செய்யும் பயிற்சியில் பல மாணவிகள் முழு மதிப்பெண் பெறுவர் … அது புரிந்து படிக்கும் எணக்கு சாத்தியமில்லை.

இதைக் கண்ட என் தந்தை கவலைப்படாதே .. நாம் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட் வாங்கலாம் என்றார்.

SRM கல்லூரிக்கு புரோக்கர் மூலம் 50 லட்சம் முன்பணம் நான் +1 படிக்கும் போதே கட்டினார். நான் சேரும் போது 65 லட்சம் கட்டி சீட் வாங்கினார். நான் படிக்க 72 லட்சம் செலவானது . பணத்தை பயங்கரமாகப் பிடுங்கினர்.

என் தந்தை அவர் ஹாஸ்பிடல் கட்டடத்தை அடமானம் வைத்து இன்றுவரை வட்டி கட்டி வருகிறார்.
ஆனால் என்னுடன் படித்த அரசு கோட்டாவில் கிடைத்த சீட்டில் படித்த என் தோழிகள் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது.

அவர்கள் சீட்டு வாங்க அவர்கள் படித்த பள்ளிகளே உதவியிருக் கின்றன. அதாவது அரசு கோட்டாவில் சீட்டு வாங்க அவர்கள் 75 லட்சம் அவர்கள் பள்ளிக்கு கட்டியிருக்கிறார்கள். அந்தப் பள்ளிகள் அவர்கள் மார்க்கை தேவையான அளவு பெற்றுத் தந்திருக்கிறார்கள்… அதாவது அரசு கோட்டாவும் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது.

நான் இப்பொழுது தனியார் மருத்துவமனையில் மருத்துவர். சம்பளம் 76000 ரூபாய். ஆனால் அதன் மூலம் நான் படிக்க செலவு செய்த காசுக்கு வட்டி கூட சரியாத வருவது இல்லை.

என் தந்தை என் தங்கைகயைை வேறு மருத்துவப் படிப்பில் சேர அறிவுறுத்தினார் .. அவள் என்னை விட படிப்பில் சுமார்தான். ஆனால் பிராக்டிகல் அறிவில் மற்றவர்களை விட திறமை அதிகம்.

ஆனால் தந்தை பொருளாதார நிலை கருதி BDS படிக்கச் சொன்னார். அதுவும் எங்கள் ஊர் தனியார் பள்ளியிலேயே படிப்பு

அவள் அதிர்ஷ்டம் நீட் தேர்வு முறை வந்தது. அவள் தேர்வு எழுத என் தந்தை தன் முழு அனுபத்தையும் பயன்படுத்தி முயன்றார் …

சோர்ந்திருந்த தந்தை மிகவும் சுறுசுறுப்பானார். +2 தேர்வில் 1200 க்கு 1090 மதிப்பெண் பெற்ற என் சகோதரி அதே அனிதா எழுதிய தேர்வில் எழுதினார் .

ணஎன் தங்கை தேர்வை எழுதிவிட்டு வர நானும் என் தந்தையும் வெளியில் படபடப்புடன் காத்திருந்தோம். என் சகோதரி பெரும்பாலான கேள்விக்கு சரியாக பதில் எழுதியதாக நம்பிக்கையுடன் கூறினார். தேர்வு முடிவில் என் சகோதரி கோவை மருத்துவக் கல்லூரியில் அரசு கோட்டாவில் சீட் வாங்கினார். மொத்த செலவு 14.5 லட்சம்தான் வருகிறது. அதுவும் ஸ்காலர்ஷிப் வேறு.

அவள் அனைவரிடமும் கூறுவது நான் படித்து முடித்து வந்து கண்டிப்பாக பாதி பேருக்கு இலவச மருத்துவம் பார்ப்பேன் என்பதுதான்.

கண்டிப்பாக நீட் தேர்வு மருத்துவப் படிப்பு கொள்ளையை முடித்து விட்டது

திறமையானவர்கள் காசில்லா விட்டாலும் மருத்துவராகலாம் … இனி மருத்துவம் வியாபாரம் எனும் நிலை மாறி சேவையாகவும் மாறும்.

என் தங்கை கூறுவது அனிதா ஏன் திமுக தலைவர்களை சந்தித்தார்? அவர் ஏன் டீவியில் திரும்ப திரும்ப காட்டப்பட்டார்? அவர் உச்ச நீதிமன்றம் செல்ல உதவியது யார்?. அவரை பேட்டி எடுத்தவர்களை சிபிஜ விசாரணைக்கு உட்படுத்தினாலே அவரை கொன்றது திமுக என்று தெரிய  வரும்.

ஆண்டுக்கு 3000 கோடியை மக்களிடம் திருட வழியில்லை. இன்று 3000 மருத்துவர்கள் திறமையானவர்கள் 2021 ல் வெளி வருவர் … அவர்கள் வரும்போது மருத்துவம் சீரடையும்.

தயவு செய்து பலருக்கு இதை கொண்டு சேர்க்கவும் … இல்லாவிட்டால் மக்கள் 3000 கோடி இழக்க வேண்டி வரும்.

வியாபாரிகள் மருத்துவர்களாக வருவார். உங்கள் பிள்ளைகள் பிறக்க உங்கள் மனைவிகளின் வயிறு கிழியும்.

R.Sivakami chandran, MBBS

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: