காங்கிரஸ் செய்த மாபெரும் துரோகத்துக்கு கணக்கு தீர்க்கும் நாள்!

கேள்வி: சாத்வி பிரக்யா காவி தீவிரவாதி, அவருக்கு பா.ஜ.க எம்.பி சீட் வழங்கியுள்ளது – தி.க, கம்யூனிஸ்ட் தி.மு.க-வினர் புலம்பல்! இது குறித்து தங்களுடைய கருத்து? (ட்விட்டரில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி)

உண்மை என்ன? இவ்விடயத்தில்(வழக்கில்) மற்றவர்களை காட்டிலும் எனக்கு பேச நிறையவே அனுபவம் இருக்கிறது. 2011 – 2014-ல் நான் பூனாவில் சட்டம் பயின்ற காலத்தில் எனது கல்லூரியின் மூத்த பேராசிரியர் மற்றும் வழக்கறிஞராக இருந்த ஒரு ஸ்வயம்சேவகர் தான் சாத்வி ப்ரக்யா மற்றும் புரோகித் வழக்குகளில் அவர்களுக்கு ஆதரவாக வாதாடி வந்தார். 20 வயது முதலே மாணவப் பருவத்தில் இந்த வழக்கு தொடர்பாக வெளியில் வராத பல ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் படித்துள்ளேன். சோனியா காந்தி ஹிந்து மதத்தை பழி தீர்க்க செய்த இந்த மாபெரும் அக்கிரமத்தை அப்போதே பார்த்து நொந்து போனவன் என்கின்ற வகையில் சொல்கிறேன், சாத்வி ப்ராக்யா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானது! இதில் மாற்றுக் கருத்து துளியும் இல்லை.

இது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி தற்போது பொதுவெளியில் உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான சிமி இயக்கத்தின் தலைவர்கள் நார்கோ சோதனை செய்ப்பட்ட போது தாங்கள் தான் சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக்கொண்டது மட்டுமின்றி ஆதாரங்களுடன் பிடிப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்க தீவிரவாதிகள் ஒப்புக்கொண்ட ஒரு பழியை ஹிந்து தலைவர்கள் மீது புகுத்தி ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி, ப.சிதம்பரம் “காவி தீவிரவாதம்” என்ற சொல்லாடலை உருவாக்கி, ராகுல் காந்தி அமெரிக்க தூதரிடம் “ஹிந்து தீவிரவாதம் தான் இந்தியாவின் மிகப்பெரிய சவால்” என்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை discredit செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தால் மொத்த ஹிந்து மதத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காக அடகு வைத்த அரக்கர்கள்.

சாத்வி ப்ரக்யாவிற்கு சிறையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் கேன்சரால் அவதிப்பட்ட போது கூட மருத்துவ சிகிச்சைக்காக பெயில் கொடுக்க விடாமல் பார்த்துக் கொண்டது சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம். அஜ்மல் கசாப்பிற்கும், யாக்கூப்பிற்கும் வளையல்களை உடைத்து கண்ணீர் வடித்த சமூக போராளிகளும், மனித உரிமை இயக்கங்களும், பெண்கள் இயக்கங்களும் சாத்வி ப்ரக்யாவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் சிறையில் நடந்தது கண்கூடாக தெரிந்தும் மூச்சைக் கூட விடவில்லை என்பது உச்சபட்ச கேவலம். சாத்விக்காக பெயில் கிடைத்து வெளியில் வந்தவுடன் ஹிந்துத்வா ஆதரவாளர்கள் crowdfunding செய்து சில லட்சங்களை அவரிடம் அப்படியே மருத்துவ சிகிச்சைக்காக ஒப்படைத்தோம், அவரது சகோதரி தான் அவரை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

இன்று சாத்வி ப்ராக்யா நெடுநாள் நீதிமன்ற கொடுமை மற்றும் யுத்தத்திற்கு பிறகு நிரபராதி என்று 100% நிரூபணமாகி மேடைக்கு மேடை தன்னை காவி தீவிரவாதி என்று முழங்கி character assasinate செய்த காங்கிரஸின் திக் விஜய் சிங்கை எதிர்த்து அதிகாரப்பூர்வ பா.ஜ.க வேட்பாளராக மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.

அதேவேளையில் ஹிந்து மதத்தை கொச்சைப்படித்தி வந்த ராகுல் காந்தி கோவில் கோவிலாக ஏறி, பூஜை பூஜையாக செய்து ஹிந்துக்கள் வாக்குகளை பிச்சை கேட்டு வருகிறார். இவையனைத்தும் “மோடி” என்ற ஒரு மாமனிதரால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்பது 100% உண்மை.

இறைவா, என்ன உன் மகிமை! சாத்வி ப்ராக்யாவிற்கு இந்த வாய்ப்பை அளித்த பா.ஜ.க தலைமைக்கு தலை வணங்குகிறேன்.

தி.மு.க கொத்தடிமைகள் காங்கிரஸுக்கு மொத்தமாக அடகு வைக்கப்பட்டு விட்டதால் மனசாட்சியே இல்லாமல் வக்காலத்து வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. இவ்விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்ப்பு ஒன்றையும் தெரிவிக்கவில்லை, ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அவர்கள் செய்தது மாபெரும் துரோகம் என்பது. ₹200 கூலிக்காக ஒரு அப்பட்டமான ஜோடிக்கப்பட்ட வழக்கை நியாயப்படுத்தாதீர்கள்!

ஹிந்து விரோத கம்யூனிஸ்ட் ஆதரவு செய்தி நிறுவனங்கள், இணையதளங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இவ்விடயத்தில் கூறும் கட்டுக்கதைகளை தயவு செய்து நம்பாதீர்கள்.

2011 முதல் இவருக்காக குரல் கொடுத்து வருகிறேன், எனது ட்விட்டர் கணக்கை தற்போது பார்த்த பின்பு தான் தெரிகிறது. மிகவும் மன நிறைவான நாள் இன்று.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...