22/10/2019 2:07 AM
உரத்த சிந்தனை இது... ராஜீவ் காந்தியின் ராணுவம்! யாராவது வாய் திறக்க முடியுமா?!

இது… ராஜீவ் காந்தியின் ராணுவம்! யாராவது வாய் திறக்க முடியுமா?!

அதிகாரம் வாய்ந்த பிரதமரின் தனிச் செயலாளர் வி. ஜார்ஜ், மணி சங்கர் அய்யர், சரளா கெரேவால், எம்.எம்.ஜேக்கப் இன்னும் சிலர் ஐ.என்.எஸ். விராட் கப்பலிலேயே தங்கியிருந்தனர்......

-

- Advertisment -
- Advertisement -

டிசம்பர் 16 1987 : ஆளற்ற சிறு தீவில் ராஜிவ் செலவிடும் விடுமுறை
– பி.ராமன்

கடந்த ஆண்டு இறுதியைத் தனது இத்தாலிய உறவினர்கள், நண்பர்களோடு செலவிட்ட ராஜீவ் இந்த ஆண்டு விடுமுறைக்காக லட்சத்தீவுகளில் உள்ள ஒரு ஆளற்ற தீவிற்குச் செல்கிறார்.

பிரதமருக்கும் அவரது பரிவாரத்திற்கும் வசதிகள் செய்துதருமாறு பாதுகாப்புப் படையினர், காண்டிராக்டர்கள், காங்கிரஸ் கட்சியினர் களமிறக்கப் பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ்க்குப் பின் ஒரு வாரம் அவர் அந்தத் தீவில் செலவிடுவார் என்பது இப்போதுள்ள திட்டம்

ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கும் வேலையை என்ஜினியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். நவின வசதிகளோடு கூடிய தற்காலிகக் குடிசைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்குத் தேவையான பொருட்கள் 200கீ/மீ முதல் 400 கீ.மீ தொலைவில் உள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. தேங்காய், மீன் இந்த இரண்டையும் தவிர எல்லாவற்றையும் விமானம் மூலம்தான் இங்கு கொண்டுவர வேண்டும். சமையல்காரர்கள், தண்ணீர், ஜெனரேட்டர், வேலையாட்கள், பாதுகாப்புப் படையினர் எல்லாமும்/எல்லோரும் வான் வழியே கொண்டுவரப் பட வேண்டும்.

டிசம்பர் 29 1987 : இதற்கும் மேலே. . . (எக்ஸ்பிரஸ் நியூஸ் செர்விஸ், கொச்சி)

மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், பிரதம்ர் எனப் பெரும் படை வந்திறங்கி இருப்பதைக் கண்டு லட்சத்தீவு நிர்வாகம் இனிய திகைப்பை அடைந்திருக்கிறது

வந்திருக்கும் பெரியமனிதர்களை உபசரிக்க ஏராளமாக அம்பலப் புழை பாயசம் விமானம் மூலம் தருவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 30: மதுவிலக்கு பிரதமரின் தேர்வு அல்ல (எக்ஸ்பிரஸ் நியூஸ் செர்விஸ், கொச்சி)

லட்சத் தீவு கூட்டத்தில், பிரதமர் தனது ஆண்டு இறுதி விடுமுறையைக் கழிக்க வந்துள்ள பங்கரம் தீவு தனித்துவமானது

இந்த ஒரு தீவில்தான் மது அருந்துவது அனுமதிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மற்ற தீவுகளில் மதுவிலக்குக் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது.

இந்தத் தீவைத் தவிர மது அருந்த அனுமதிக்கப்படும் மற்றொரு இடம் கடலில் உள்ள கப்பல்தான்! விஐபிகளின் தேவைக்காக தேர்ந்தெடுத்த பிராண்ட் மதுவகைகள் பெட்டி பெட்டியாக ஏற்கனவே பங்க்ராமிற்கு அனுப்பப்பட்டு விட்டன.

கோழி, மாமிசம், காய்கறிகள் சுகாதார இன்ஸ்பெக்டர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு கொச்சியிலிருந்து விமானம் மூலம் அனுப்பப்படுகின்றன

ஜனவரி 24 1988: அந்த விடுமுறை.. பங்கிராமிலிருந்து மாதவன் குட்டி

புத்தாண்டு விடுமுறையின் போது குறைந்தது எட்டு அயல்நாட்டவர் பிரதமரின் குடும்பத்தோடு இணைந்து கொண்டனர். ஆண்கள் பெண்கள் குழந்தைகளாக மொத்தம் 24 பேர்கள். அவர்களது தேவைகளை கவனித்துக் கொள்ள வெவ்வேறு துறைகளிலிருந்து 70 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களைத் தவிர, பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய பிரதேச ஆயுதப் போலீசார், லட்சத்தீவு போலீசர் என 1200 பேர் அருகில் இருந்த அகட்டி தீவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடற்படையால் கண்காணிக்கப்பட்ட் பாதுகாப்புக் கடுமையானதாக இருந்தது விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஐ.என்.எஸ். விராட், போர்க்கப்பல்கள் ஐஎன் எஸ் விந்தியகிரி, தாராகிரி, மகர் ஆகிய கப்பல்களும் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன

பிரதமருக்கும் அவரது கோஷ்டியினருக்கும். நீச்சல், படகு செலுத்தல், டினா மீன் பிடித்தல் போன்ற ஏராளமான பொழுது போக்குகள் இடம்பெற்றிருந்தன ஆண்களும் பெண்களும் இரு அணிகளாகப் போட்டி போடும் கபடி விளையாட்டும் இருந்தது ஓர் இந்தியத் தன்மையைக் கொடுத்தது.புத்தாண்டு இரவில் கடற்கரையில் ஓர் உற்சாகமான பார்ட்டி நடந்தது.

அதிகாரம் வாய்ந்த பிரதமரின் தனிச் செயலாளர் வி. ஜார்ஜ், மணி சங்கர் அய்யர், சரளா கெரேவால், எம்.எம்.ஜேக்கப் இன்னும் சிலர் ஐ.என்.எஸ். விராட் கப்பலிலேயே தங்கியிருந்தனர்……

தகவல்கள்: நன்றி… இந்தியன் எக்ஸ்பிரஸ்

  • நம்பி நாராயணன்
Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: