துறவிக்கு வேந்தனும் ஒரு துரும்பு!

துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு - போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.

இந்து மதத்தை தரக்குறைவாக பேசிய ஒரு இழிபிறவிக்கு எதிர்வினையாற்றிய போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய Sampathkumar Jeeyar மடாதிபதி என்பதால் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது; மதத் தலைவர் ஆலயப்பணிகளில் மட்டுந்தான் கவனம் செலுத்த வேண்டும், இத்யாதிகளைப்  பேசிக் கொண்டு திரிபவர்களது கவனத்திற்கு மட்டும்:

  1. யாரோ ஒருத்தன் ஏதோ பேசிட்டான், நமக்கெதற்கு என்ற உங்கள் மனநிலை தான் இந்த இழிபிறவிகள் இந்து சமுதாயத்தை எந்தவித மரியாதையுமின்றி, என்ன பேசினாலும் ஒதுங்கிப் போவார்கள் என்ற திமிரில் அவமதிப்பதற்கான அடிப்படைக் காரணம்.

2. எதிர்வினை ஆற்ற துப்பில்லன்னாலும் பரவாயில்ல, எதிர்வினை ஆற்றுபவர் களையும்  உங்களைப் போல சொரணையற்ற, சோற்றாலடித்த பிண்டங்களாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் பண்ணாதீர்கள்!

3. அடுத்த தெருவில் தானே தீப்பற்றி எரியுது, நம்ம வீடு எரியுறப்ப பாத்துக்கலாம்ன்னு சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்கு தீயை அணைக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறவன தடுக்க முயல வேண்டாம்.

4. உங்களுக்கு என்ன பிரச்னை? எதிர்வினையா? அல்லது மதத் தலைவரின் எதிர் வினையா? எதிர்வினை தவறென்றால், வழக்கம் போல மிக்சர் சாப்பிட்டுக் கொண்டோ, விரல் சூப்பிக்கொண்டோ, வாய் திறவாதிருக்கவும்; மடாதிபதி பேசியது தான் உங்கள் பிரச்சனை என்றால், நாமெல்லாம் வாளாவிருப்பதால்தான் அவர் பேசுகிறார். நாம் எதிர்வினை ஆற்றியிருந்தால் அவர் அவரது பணிகளில் கவனம் செலுத்துவார். 

5. நாம ஒண்ணும் பண்ணாம இருந்துகிட்டு, செய்றவங்களையும் நொள்ளை, நொட்டை சொல்வது அக்மார்க் கமல் தனம்.

6. கமல்தனத்தோட நிக்காம, ஜீயர் என்ன பண்ணனும், என்ன பேசணும், பேசக் கூடாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கு தகுதியில்லை! ஒரு வேளை தகுதி இருப்பதாக நெனச்சிங்கன்னா, அது இங்கே வேண்டாம்; இந்து மதத்த இழிவு படுத்துறவனிடம் சென்று தங்களது வீறாப்பைக் காட்டலாம். அதுக்கு துப்பில்லை என்றால், மூடிக் கொண்டு போகலாம்.

விஸ்வாமித்ரர் ஒரு துறவி – அஸ்த்ர ப்ரயோகங்களை ராம, லஷ்மணருக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்.

துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு – போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.
போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.

பரசுராமருக்கு மிஞ்சிய தவஸி இல்லை; போர் வீரரும் இல்லை.

கடைசியா ஒரு வார்த்தை…

துறவிக்கு வேந்தனும் துரும்பு.

– கருத்து: மு.ராம்குமார்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...