ஜின்னாவின் தனி நாடு கொள்கை Vs காந்தி அகண்ட பாரத கொள்கை

சுருக்கமாக சொல்வதாக இருந்தால்..தேசப்பிதா காந்தியின் ஆயுதங்களற்ற அமைதிவழி போராட்டமான அஹிம்சை வழிக்கும், கம்யூனிஸ்டுகளின் ஆயுத வழி புரட்சிப்போராட்டத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

ஆகஸ்ட் 16, 1946.. Direct Action Day : முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்கிற தனி நாடு உருவாக்கப் படவேண்டும் என்பதில் பெரும் பிடிவாதத்துடன் இருந்தார் ஜின்னா. காந்தி ..அகண்ட பாரத கொள்கை கொண்டிருந்தார். நாடு மத ரீதியாக இரண்டாக பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை. காந்தியின் பிடிவாதம் ..காங்கிரசை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

பொறுமையிழக்கும் ஜின்னா..பாகிஸ்தான் பிரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதை பிரிட்டிஷாருக்கும், ‘காந்தியின்’ காங்கிரசுக்கும் புரியவைக்கிறேன் என்று கூறி அறிவித்தது தான் Direct Action Day.

இந்தியா-பாகிஸ்தான்- பங்களாதேஷ் என்று பிரிக்கப்படாத நிலையில்..அப்போதைய வங்காளத்தில் முஸ்லிம் லீக் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஜின்னாவின் அறிவுறுத்தலின் பேரில் ..இங்கு பந்த் அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவளித்து முஸ்லீம் லீக் ஆட்சியுடன் கை கோர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள் . விளைவு.. ரத்த சரித்திரமான நவகாளி கலவரம்.

இந்த ஆதரவுக்கு ஒரு காரணம் இருந்தது.

இங்கிலாந்தும், பிரான்சும் ஹிட்லரை எதிர்த்து ஜெர்மனியுடன் போரை துவக்கியபோது…ரஷ்யா முதலில் அதை ஆதரிக்கவில்லை. விலகி நின்றது. அதை பின்பற்றி இந்திய கம்யுனிஸ்டுகளும் ஹிட்லர் எதிர்ப்பிலிருந்து விலகி நின்றார்கள். இந்த நிலையில்..ஜப்பானும் போரில் இறங்குகிறது. சுபாஷ் சந்திர போஸும் தன்னுடைய படையின் ஆதரவை தெரிவிக்கிறார்.

இதனால்..சுபாஷ் சந்திர போஸை ”Fifth Columnist” என்று குற்றம் சாட்டி வசைபாடினார்கள் இந்திய கம்யூனிஸ்டுகள்! [ Fifth Columnist என்றால்..உள்ளிருந்தே துரோகம் இழைக்கும் ஐந்தாம் படை என்று பொருள். ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் ‘துரோகி’ என்று பொருள்.]

பின்னர் நிலைமை மாறுகிறது. ஹிட்லரின் பார்வை ரஷ்யாவை நோக்கி திரும்பியவுடன் தான் ரஷ்யா ஹிட்லருக்கு எதிராக போரில் இறங்குகிறது.

பிரிட்டனும், பிரான்சும் ஹிட்லரை எதிர்த்தபோது விலகி நின்ற ரஷ்யா, தான் போரில் இறங்கியவுடன் ..அதை ‘மக்களின் போர்’ என்று பிரகடனப் படுத்துகிறது. உடனே இந்திய கம்யூனிஸ்டுகளும் இது மக்களின் போர் என்று முழக்கமிட்டு..போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அந்த நேரத்தில்தான்..இந்தியாவில் ..ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக.. வெள்ளையனே வெளியேறு போராட்டம் காந்தியால் தீவிரமாக முன்னெடுக்கப் படுகிறது.

இந்த நேரத்தில் பிரிட்டனை எதிர்ப்பது..போரில் இறங்கி இருக்கும் ரஷ்யாவிற்கு பிரிட்டனின் ஆதரவு தேவைப்படுவதில் சிக்கல்களை உண்டாக்கும் என்பதற்காக ..வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று அறிவிக்கிறார்கள் இந்தியாவின் கம்யூனிஸ்டுகள். கூடுதலாக, வங்கத்தில்…முஸ்லீம் லீக்குடன் இணைந்து கொண்டு.. நவகாளி கலவரம் என்னும் மிகப் பெரும் கொடுமையான ரத்த சரித்திரத்திற்கு வழி ஏற்படுத்தினார்கள்.

இந்த ரத்த ஆற்றில் காயப்பட்டுக்கிடந்த மக்களுக்கு, பாலியல் வன்புணர்வினால் புண்பட்டுக் கிடந்த பெண்களுக்கு ..கலவர களத்தில் நின்று காப்பாற்றி, உடலுக்கும், மனதிற்கும் மருந்திட்டு சேவையாற்றியது… அப்போதைய RSS. இதுவும் சரித்திர நிகழ்வான உண்மை.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் கம்யூனிஸ்டுகளை நோக்கி அவர்களின் தலைவரான P.C.Joshi-க்கு கடிதம் எழுதினார் காந்தி.

அதில் அவர் கேட்டிருக்கும் கேள்விகள் சுவாரசியமானவை.

1.. மக்களின் போர் என்று ரஷ்யா ஈடுபடும் போரை
குறிப்பிடுகிறீர்களே..அப்படியானால்..இந்தியாவில் ஆங்கிலேயனுக்கு எதிராக நடக்கும் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மக்களின் போர் இல்லையா ?

தெற்காப்பிரிக்காவில்..கருப்பர்கள் நடத்துவது மக்களின் போர் இல்லையா ?

  1. உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது ? உங்களுடைய கட்சியின் கணக்கு வழக்குகளை..மக்களின் பார்வைக்கு ..என்னுடைய பார்வைக்கு காட்டுவீர்களா ?

என்றெல்லாம்..காந்தி அக்கடிதத்தில் கேட்டிருக்கிறார்!

சுருக்கமாக சொல்வதாக இருந்தால்..தேசப்பிதா காந்தியின் ஆயுதங்களற்ற அமைதிவழி போராட்டமான அஹிம்சை வழிக்கும், கம்யூனிஸ்டுகளின் ஆயுத வழி புரட்சிப்போராட்டத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

இனிப்பும் கசப்பும் போல..எதிரெதிர் சித்தாந்தங்கள்.

கட்டுரை: – பானு கோம்ஸ் (Banu Gomes)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...