spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகேப்மாரி... சோமாரி... இதெல்லாம் என்ன கமல்?!

கேப்மாரி… சோமாரி… இதெல்லாம் என்ன கமல்?!

- Advertisement -

யாரோ கொடுத்த பெயரை நாம் இன்றும் சுமப்பது தேவையா என்று கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி இருக்கிறார். அதாவது ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஹிந்து என்கிற வார்த்தையை எங்கும் சொல்லவில்லை. முகலாயர்கள் கொண்டு வந்த இந்த வார்த்தையை நாம் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தான் கமல்ஹாசனின் கேள்வி.

மேலோட்டமாக பார்த்தால் அவரின் கேள்வியில் லாஜிக் இருப்பது நிஜம். ஆனால் அதையும் தாண்டி அவரிடம் இருப்பது புதைந்து கிடக்கும் விஷம். எல்லாவற்றையும் விட இப்பொழுது நடக்கும் தேர்தலில் இது ஒரு அத்தியாவசிய பிரச்சனையா என்பதுதான் முக்கியமான கேள்வி!

திருக்குறளில் தமிழ் என்னும் வார்த்தை இல்லை. அது எப்படி சாத்தியம்? திருக்குறள் உலகப் பொதுமறை. அதிலும் முற்றிலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு பொக்கிஷம். சனாதன தர்மம் சொன்ன எல்லா விஷயத்தையும் திருக்குறளில் காணலாம். எல்லாவற்றையும் சொன்ன திருவள்ளுவர் எதற்காக தமிழை பற்றி ஒரே ஒரு குறள் கூட இயற்றவில்லை?

சரி. எந்த சங்க இலக்கியத்திலாவது தமிழன் என்று வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டு அவனை ஒரு தனி இனமாக காண்பிக்கப் பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நிலங்கள் பல்வகை படுத்தப் பட்டு ஒவ்வொரு நிலத்தில் இருப்பவனுக்கும் ஒரு பெயர், அவனுக்கு என்று ஒரு தெய்வம் வரையருக்கப்பட்டு இருக்கிறது.

அதுவும் போகட்டும். 200 வருடங்களுக்கு முன் தமிழ்நாடு என்று ஒன்று இருந்தது உண்டா? கடந்த 2000 ஆண்டுகளில் இன்றைய தமிழகம் எப்படி அழைக்கப்பட்டு வந்திருக்கிறது? இங்கே ஆண்ட மன்னர்கள் யார்?

ஒரு விஷயம் தெரியுமா? அதிக அளவில் உள்ளூர் சண்டை அதிக அளவில் நடந்த ஒரு பிரதேசம் யாதெனில் அது இன்று தமிழகம் என்றும் முன்னாளில் சேர சோழ பாண்டிய பல்லவ தேசம் என்று பல்வேறு மன்னர் இனத்தால் சொல்லப்பட்ட இடமாகிய நம்முடைய இந்த நிலம் தான்!

இப்படி தமிழைப் பற்றியோ தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழன் என்ற தனி இனத்தை பற்றியோ எங்குமே எதிலுமே வரையறுக்காத ஒன்றை ஏன் கமலஹாசன் இப்பொழுது தாங்கிப் பிடிக்கிறார்?

கமலஹாசனுக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன? நன்றாகத் தெரியும். இன்னும் நம்மைவிட நன்றாகத் தெரியும். தெரிந்தும் ஏன் இப்படி பிரித்து, சீமான் போல் பேசுகிறார்? அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.

தென்னிந்தியா ஓர் Federation போல செயல்பட வேண்டும் என்றும், இந்தியாவின் பிற மாநிலங்களை, குறிப்பாக வட இந்தியாவின் அவலங்களை அதிக வரி செலுத்தும் தென்னிந்திய மாநிலங்கள் சுமக்கின்றன என்றும் இவர் குறிப்பிட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

Nation state is a very recent phenomenon across the globe. அமெரிக்காவே united states of America தான்!. நாடுகள் இணைந்ததும் பிரிந்ததும் இந்த 250 வருடங்களுக்கு உட்பட்ட ஆண்டுகளில்தான்.. மதங்களும் அது போன்றதுதான்..

இங்கே படையெடுத்து வந்தவர்கள் இஸ்லாமியர்களாக வரவில்லை.. துருக்கியர்கள் ஆக முகலாயர்கள் ஆக ஆப்கானிஸ்தானியராக, வந்தவர்கள்தான்..

கமலஹாசனின் பேச்சு மிகவும் வருத்தத்திற்குரிய பேச்சு. கிட்டத்தட்ட சீமான் ரேஞ்சுக்கு வந்து விட்டார் மனிதர். அரசியல் என்பது இவர் நினைக்கும் அளவிற்கு அல்ல. எந்தக் கட்சியும் இன்றைய சூழ்நிலையில் இவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள போவது இல்லை..

போதாத குறைக்கு சோமாரி கேப்மாரி என்றெல்லாம் வசைகளை பாட ஆரம்பித்து விட்டார்..

இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு களமிறங்கிய கமல்ஹாசன் தேவையில்லாத பேச்சுக்களால் இருந்த கொஞ்ச நஞ்ச மக்கள் அபிமானத்தையும் இழந்து கொண்டு வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை..

கமல்ஹாசன் உணர்வதை விட அவருக்கு முட்டுக் கொடுத்து அவரை இன்றும் தூக்கிப் பிடிக்கும் ஒருசில சமூக வலைத்தள அறிவுஜீவிகள் இனியாவது தங்களது பிழையை திருத்திக் கொண்டால் நல்லது..

கமல்ஹாசன் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அவரது வரட்டுப் பிடிவாதம் அதை தடுக்கும்.

–  Shriram Tkl

2 COMMENTS

  1. Padmasri அவார்டு வாங்கிய ஒருவர் இப்படி கண்ணியமற்ற வார்த்தைகள் பேசலாமா? அப்புறம் இவருக்கும்,தெருப்பெச்சாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

  2. தன் மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி இல்லை என்று சேர்த்தவர்…ஆனால் அரசியலில்.நுழைந்த பின் குப்பையாகி வருகிறார்….

    ஆன்மிகம் இல்லை என்று சொன்னால் கீழ்தரமானவர்களாகிவிடுவர் என்பதற்கு இது சான்று..

    ஆனால்…இதே போல் அன்று முகலாய மன்னர்கள் இந்தியாவிற்கு செய்த துரோகங்களைச் சொல்லும் தைரியம் அவருக்கு இருக்கிறதா..

    இந்துக்கள் இளிச்சவாயர்கள்..

    என்ன வேண்டுமானாலும் பேசலாமா…கமல் சார்?????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe