தமிழகம் அறிய வேண்டிய வரலாற்று ஆய்வாளர் தொப – தொ. பரமசிவம்.

அவர் சொன்னார். நீங்கள் அடிக்கடி சொல்லும் தகுதியே தடை என்பதே இன்றைய யதார்த்தம். இன்றைய அரசியலும் நீங்கள் கூறுவது போல சந்தை வியாபார அரசியலாகத் தான் இருக்கிறது. மக்கள் நல அரசியல் தடம் மாறிவிட்டது. உலகமயமாக்கல் போல் பொதுவாழ்வில் பணமயமாக்கல் ஆகிவிட்டது என்றார்.

நேற்றிரவு (18/05/2019) திருநெல்வேலி சென்றபோது, வரலாற்று அறிஞர் தொப. (தொ.பரமசிவம்) அவர்களை பாளையங்கோட்டை தெற்கு பஜாரின் அருகேயுள்ள அவரின் இல்லத்தில் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது உடல் நலம் விசரித்தேன்.

அப்போது, பல வரலாற்று செய்திகளையும், தமிழக அரசியல் குறித்தும் நீண்டநேரம் விவாதித்தோம்.

அவர் சொன்னார். நீங்கள் அடிக்கடி சொல்லும் தகுதியே தடை என்பதே இன்றைய யதார்த்தம். இன்றைய அரசியலும் நீங்கள் கூறுவது போல சந்தை வியாபார அரசியலாகத் தான் இருக்கிறது. மக்கள் நல அரசியல் தடம் மாறிவிட்டது. உலகமயமாக்கல் போல் பொதுவாழ்வில் பணமயமாக்கல் ஆகிவிட்டது என்றார்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், வள்ளலார் குறித்தும் அவர் கடந்த காலத்தில் கடந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்தெல்லாம் நினைவுப்படுத்தி பேசினார். உடன் வந்த கவிஞர் கிருஷி, ஈர விறகும், காய்ந்த வாழை மட்டையை போல இன்றைக்கு எல்லா விடயங்களும் உள்ளன என்று குறிப்பிட்டார். உங்களை சுற்றி துப்பாக்கிச் சூடுகள் பலமுறை நடந்துள்ளது என்று என்னை நோக்கி கேட்டார். எனக்கு புரியவில்லை.

அவரே விவசாய சங்க போராட்டத்தின் போதும் உங்கள் கண்முன்னால் துப்பாக்கிச் சூடு நடந்தது, ஒரு காலத்தில் உங்களோடு மிகவும் நெருங்கிய சகாக்களான விடுதலைப் புலிகள் மீதும் ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடந்தது. இதுபோன்ற சம்பவங்களால் தான் அப்படி கூறினேன். இது தொடர்பாக நீங்கள் பெற்ற தகவல்களை நிறைய கூறவும் என்று கிருஷி கூறினார்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த அருமையான நல்ல பேராசிரியர் தொப. வெறும் மரக்கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு எங்களிடம் அரைமணிநேரம் பேசினார். அம்பை பாரதி கண்ணனும் உடனிருந்தார். அவர் பேச பேச அறியப்படாத பல செய்திகளை கேட்டுக் கொண்டோம்.

இப்படிப்பட்ட அரிய பெரிய அறிஞர்களை அரசுகள் பாதுகாக்க வேண்டும். இது கடமை மட்டுமல்ல தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்ற தொ.ப. போன்ற ஆளுமைகள் இன்றைக்கு தேவை.

என்னுடைய ‘நிமிரவைக்கும் நெல்லை’ புத்தக வெளியீட்டு விழா – 2005 ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த போது, தொப. கலந்து கொண்டு உரையாடினார்.  அவரோடு தி.க.சி, தோப்பில் முகமது மீரான், மாலன், கழனியூரன், சுபக்கோ. நாராயணசாமி, ரசிகமணிணின் பேரன் தீப. நடராஜன், தமயந்தி போன்றோர்கள் எல்லாம் பங்கேற்றனர். அதன் பின் அவரைசந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

உங்களின் நிமிரவைக்கும் நெல்லை என்ற ஆவண வரலாற்று நூலில் கி.ரா.வின் வார்த்தைகளின்படி நெல்லை மாவட்டத்தின் கெசட் மட்டுமல்ல அதன் முத்திரைகளையும் அடையாளங்களும் அதில் உள்ளது என்றார்.மகிழ்ச்சி என்று விடைபெறும்போது குறிப்பிட்டார். அவர் நலம் பெற வேண்டும்.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...