இந்திய தேசம் ஒரு பரத கண்டம். இதில் தேர்தல் நடத்துவது மிகவும் கடினமான பணி. அதை முடிந்த அளவு செவ்வனே தேர்தல் கமிஷன் செய்து முடித்து விட்டதற்கு ஒரு சபாஷ்.

இனி களத்திற்கு வருவோம். ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் பொதுவான மற்றும் நிலப்பரப்பு சார்ந்த பிரச்சினைகளின் தீர்வும், மொழி மத மற்றும் இன போன்ற கலவையான பிரச்சினைகளையும் அதை தீர்க்கவல்ல ஒரு தலைமையின் பக்கமே மக்கள் நிற்க முனைந்தது நன்றாக தெரிகிறது இத்தேர்தலில். அஸ்ஸாமின் குடியேற்றப்பிரச்சினை குஜராத்தில் புரியாது. பெங்கால் ஹிந்துக்களின் கதறல்கள் உத்தராகண்டிலோ கேரளத்திலோ புரிந்து கொள்ள மாட்டார்கள். கச்சத்தீவு பற்றி கல்கத்தாவில் தெரிய வாய்ப்பிருந்தாலும் அதுஅங்கு nonissue. இதனைத்தும் ஒன்றாய் தீர்க்கவல்ல வலிமையான தலைமையை தேர்ந்தெடுக்க முனைந்திருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

இதற்கான ஆணிவேர் ஒரு தலைவர்.. நம்மை புரிந்து கொண்டு நமக்காக நடப்பார்.. வழி நடத்துவார் என எண்ணப்படுவது தெளிவு. இதில் மோதி என்கிற மனிதனின் தலைவனின் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் அசைக்க முடியாமல் வேரூன்றப்பட்டதில் லுடியன்கள கான் மார்கெட் மற்றும் இன்ன பிற வியாபாரிகள் ஆடிப்போனது உண்மை..

இப்படியான ஒரு சூழலில்.. நான் இந்தியன் என்கிற உணர்வு.. தெற்கத்திய மாநிலங்களை விட ஹிந்தி மாநிலங்களில் அதிகம். மொழி மீதான வெறி ஒருபுறம் இருந்தாலும்.. இந்தியன் என்பது அடுத்து வந்தே தீருகிறது தெற்கில். இதற்கு இடையில் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் அடங்கிமுடிந்துவிட.. ஹிந்துக்களின் எழுச்சி இங்கே தொடங்கி விடுகிறது.கேரளத்தில் சபரிமலையும்.. தமிழகத்தில் விளங்காத பெரியாரிஸ ஹிந்து எதிர்ப்புமே மொழி தாண்டி.. இனம், ஜாதிதாண்டி ஒருங்கிணைக்க முதல் காரணம். தெலுங்கானாவின் டிஆர்எஸ்ஸை கவனித்தால்.. தன் ஆட்சியை காப்பாற்ற இஸ்லாம், ஹிந்து மக்களுக்கு கவர்ச்சியாய் திட்டங்களும்.. மத சார்பான ஆஸ்பத்திரிகளும். இது இன்னமும் ஆபத்தானது ஆப் போல். ஒரே சந்தோஷம் தில்லியில் விரட்டப்பட்ட ஆப் பஞ்சாபில் போய் நின்றிருக்கிறது. கனடா கனெக்‌ஷன் காரணம் என்று தோன்றுகிறது.

குஜராத்தை தாண்டி மோதி வடமாநிலங்களில் வளற மோதியின் ஹிந்தியால் மக்களை தொடமுடிந்தது காரணமென்றால்.. மீதமுள்ள அடிப்படை வளர்ச்சிகள் மக்களை இவரால் அதற்குமுன்னரே அவர்களை தொட்டுவிட்டன. கியாஸ், லைட், மருத்துவ வசதி மற்றும் சாலைகள்.. இவை தாண்டி.. பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகள்.. விலைவாசி, fiscal deficit மற்றும் வட்டி விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவியது.இது சாமான்யனுக்கு புரிகிறது. படித்த மேதாவிகள் ட்விட்டரில் அலறி ஏசியை அதிகப்படுத்தியதோடு முடிந்து போனது. கடைசியில் சாமான்யன்தான் கடைசி சிரிப்பை சிரித்தான்.. கான் மார்க்கெட் ஜிஹாதிகளோ, தில்லி லுடியன்களோ, லெப்ட் லிபரல்களோ, மய்ய பொறுக்கிகளோ, நடுநிலை ந களோ அல்ல.

இந்த தேர்தலில்.. விலைவாசி என்பதை ஏன் யாரும் பேசவில்லை..? அந்த அளவில் மாபெரும் வெற்றி தான். வட்டிவிகிதங்கள், அதிகளவில் எகிறாத வீட்டு விலைகள் என்று பலதும் சாமான்யனுக்கு சார்பாக இருக்கும்போது பாதி கம்யூனிஸ்டுகளுக்கு இதனால் வேலையில்லாமல் போய்விட்டது.

இந்த அரசுக்கு. அதிதீவர ஹிந்துத்வம் மிக ஆபத்தானது என்று சொல்லுமுன்.. தீவிரவாத இஸ்லாமிய ஜிஹாதிகளையும் தேச உடைப்பு ஜேஎன்யூ சக்திகளையும், இடதுசாரி தீவிரவாதங்களை, நக்ஸல்களை முறியடிக்க வேண்டும் என்று பாரதீயனாய் குரல் கொடுங்கள் பார்க்கலாம். சாயம் வெளுக்கும் உங்களுக்கு..நீங்கள் இடது லிபரல்களாக இருந்தால்..

சரியான வேட்பாளர் தாண்டி.. நிறைய கடமைகள் அரசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.. சட்டமாற்றங்கள் முதல்.. வேலை வாய்ப்பு.. கட்டமைப்பு.. முக்கியமாய் நாட்டை ஏமாற்றிய ராஜாக்களையும்.. பழவகைகளையும் டெலிஃபோன் திருடர்களையும், நேஷனல் ஹெரால்டு முதல..சாரதா பிக்பாக்கெட்டுகள் வரை உள்ளே போடவேண்டியது தலையாய கடமை.

பல மாற்றங்களை அடுத்த அரசில் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பார்க்கலாம்.

– பிரகாஷ் ராமஸ்வாமி (Prakash Ramasamy)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...