வாக்குப் பதிவு இயந்திரம் ஈவிஎம்.,முக்கு மட்டும் பாஜக., காங்கிரஸ், சுயேச்சை என்று உணரக் கூடிய எண்ணம் இருந்திருந்தால், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் இவற்றில் எல்லாம் மீண்டும் பாஜக.,தான் வெற்றி பெற்றிருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்!

ஒவ்வொரு EVM ற்கும் ஒரு தனிப்பட்ட எண் உண்டு. (unique identification number). தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு EVM ஐயும் அந்தந்த கட்சிகளின் வாக்குப்பதிவு ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு.. எல்லோரிடமும் ஒப்புகைக் கையெழுத்துப் பெறப்படுகிறது. மாலையில் அந்தந்த தொகுதியின் EVM எண்கள் அதற்குரிய வேட்பாளரிடம் வழங்கப்படும்.

இந்த வேட்பாளர்கள் தங்களின் ஒரு பிரதிநிதியை EVM வைக்கப்பட்டிருக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தங்க வைக்க அனுமதியும் உண்டு. EVM களுக்கு 24×7 ஐந்தடுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது..!

அதே போல வாக்கு எண்ணிக்கை ஆரம்பிப்பதற்கு முன் இதே EVM கள் அந்தந்த பிரதிநிதிகள் முன்னர் பரிசீலினை செய்யப்படும்..!

யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்கள் இதனை முழுமையாக வீடியோவும் எடுத்துக் கொள்ளலாம்..! இதில் எப்படி இவைகளை மாற்ற முடியும்..?

டெக்னிகல் சூப்பர் ஸ்டார் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, ஹைதராபாத்துக்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகள், நிறுவனங்களை சென்னையில் இருந்து நகர்த்திக் கொண்ட சந்திரபாபு நாயுடு தேவையில்லாமல் வெட்டி சீன் போட்டுக் கொண்டு இருக்கிறார்…! பெரிய லெவலில் இவர் ஏதோ தவறு செய்திருக்கிறார். அதான் பதட்டமும் கடுமையா இருக்கிறது அவருக்கு என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இந்நிலையில், எழுத்தாளர் சுஜாதா மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பற்றி சொன்னதையும் பகிர்ந்து வருகிறார்கள்…

ஒரு கால்குலேட்டரில் 2 +2=? என்று கேட்டால், சிந்தாதிரிப் பேட்டையில் ‘ஐந்து’: உடுமலைப் பேட்டையில் ‘பதினைந்து’ – என்று ஊருக்கு ஊர் மாறுபட்ட விடை வருமாறு மாற்றிவிட்டார்கள் என்று சொல்வது போல இது!

இந்திய மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் PC போல ‘ஜெனரல் பர்ப்பஸ்’ கம்ப்யூட்டர் அல்ல. அதன் செயல்பாடு EMBEDDED PROGRAM என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது – கிடையாது… என்று குறிப்பிட்டு வருகிறார்கள்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் குறித்து சர்ச்சை செய்பவர்களின் ஒரே நோக்கம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வந்து கள்ள ஓட்டு போட்டு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, வாக்கு எண்ணிக்கையில் சிவகங்கை தொகுதியில் நடந்தது போல் தில்லுமுல்லு செய்து,  தோற்றவரை ஜெயிக்க வைத்தது போல், நாட்டை கபளீகரம் செய்யும் திருடர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆட்சிக்கு வர முயற்சி செய்வதற்குதான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...