தமிழை…….வளர்த்தவர்கள்……
~~~~~~~~~~~~~~~~~~~~~~
“ஐயா ,ஐயா”…
வெளியில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டதும் அந்த வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார்.
யாராவது உதவி கேட்டு வந்திருப்பார்கள் என நினைத்தவருக்கு ஆச்சரியம், வந்திருப்பவரை பார்த்தால் பெரிய மனிதராகவும், நல்ல படிப்பாளியாகவும் தெரிந்தார். அவரது முகத்தில் அப்படி ஒரு தெளிவு இருந்தது.

“என்ன வேண்டும்?”
“தங்கள் வீட்டில் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன். அவற்றில் தமிழ்மொழியின் சிறந்த இலக்கியங்களும் இருக்கலாம். ஓலைச்சுவடியில் உள்ளவற்றையெல்லாம் எழுதி புத்தகமாக அச்சிட்டு வருகிறேன். உங்கள் வீட்டில் உள்ள ஓலைச்சுவடிகளை தந்தால் அவற்றை பார்த்து எழுதிவிட்டு திருப்பி தந்துவிடுகிறேன். இந்த உதவியை மறுக்காமல் தாங்கள் செய்தல் வேண்டும்”.

இதனைக் கேட்ட வீட்டுக்காரருக்கு கோபம் வந்துவிட்டது.
“நாளை ஆடிப்பெருக்கு. ஆற்றில் விடுவதற்காக வீட்டில் கொஞ்சம் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறேன். அவ்வாறு செய்தால் புண்ணியம். அது பொறுக்கவில்லையா உமக்கு? அவற்றை தரமுடியாது” எனக்கூறி வந்தவரை விரட்டினார்.

பெரியவர் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் வீட்டுக்காரர் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்காரருக்கு தெரியாமல் வேறொரு வீட்டுத்திண்ணையில் படுத்துக்கொண்டார். கடும்குளிரும் பனியும் அவரை வாட்டின.

விடியற்காலையில் கோழிகூவியதும் அந்த வீட்டுக்காரர் ஓலைச் சுவடிகளை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு செல்வதை பார்த்தார். அவரை பின்தொடர்ந்து மறைந்து மறைந்து சென்று ஒரு புதருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டுக்காரர் நீராடியபின் ஓலைச்சுவடிகள் ஆற்றில் விட்டுச் சென்றார். அவர் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை அப்பெரியவர் தேடி எடுத்தார். அங்கேயே வாசிக்கத் தொடங்கினார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் தேடித்தேடி அலைந்த அருந்தமிழ் இலக்கியங்கள் சில அச்சுவடிகளில் இருந்தன. (இந்த நிகழ்ச்சி இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் நடந்தது).

இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். இவ்வாறு பல இன்னல்கள்பட்டு வீடுவீடாகச் சென்று அழியவிருந்த பல ஓலைச் சுவடிகளை சேகரித்து புத்தகமாக அச்சடித்து வெளியிட்டார்.

அவ்வாறு அழிவு நிலையில் இருந்த பல இலக்கியங்கள் இவரால்தான் மீட்கப்பட்டன.

இப்படியாக அவரால் ஓலைச் சுவடிகளாக மீட்கப்பட்டு அச்சேறிய தமிழ் இலக்கியங்கள்
எட்டுத்தொகை 8
பத்துப்பாட்டு 10
சீவக சிந்தாமணி 1
சிலப்பதிகாரம் 1
மணிமேகலை 1
புராணங்கள் 12
உலா 9
கோவை 6
தூது6
வெண்பா நூல்கள் 13
அந்தாதி3
பரணி 2
மும்மணிக்கோவை 2
இரட்டைமணிமாலை 2
பிற பிரபந்தங்கள் 4…..

அந்தப் பெரியவர் வேறுயாருமல்ல, உத்தமதானபுரம், வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன் என்று அழைக்கப்பட்ட நம் தமிழ்தாத்தா உ.வே.சா என்று அன்பாக தமிழர்களால் அழைக்கப்படும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். காலம் 1853-1941.

CBSE ஆறாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து……

இப்போது சொல்லுங்கள் …

உண்மையில் கஷ்டப்பட்டு தமிழை வளர்த்தது யார்?

தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் யார்?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...