spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநீங்களும் வேணும்னா கன்யாஸ்திரிய கற்பழிச்சுக்குங்க... யார் உங்கள தடுக்கப் போறாங்க..!?

நீங்களும் வேணும்னா கன்யாஸ்திரிய கற்பழிச்சுக்குங்க… யார் உங்கள தடுக்கப் போறாங்க..!?

- Advertisement -

சர்ச்சைக்குரிய கிறிஸ்துவ செயற்பாட்டாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர் எனும் பெயரில் இயங்கும் ஜான் தயாள் என்னும் கிறிஸ்தவ, அர்பன் நக்ஸல் ஆதரவு, ஹிந்து விரோத போக்குடைய பேனலிஸ்ட், பெரும்பாலான வட இந்திய ஊடகங்களிலும் தலைகாட்டுவார். இவர் பலமுறை இந்திய நாட்டுக்கு எதிரான கருத்துகளை சத்தமிட்டுக் கூறி, ரிபப்ளிக் டிவியில்., அவரை விட அதிக சத்தமிடும் அர்னாப் கோஸ்வாமியிடம் மூக்குடைபட்டிருக்கிறார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், மிகவும் தகாத முறையில் ‘டெம்ஸ் நௌ’ சேனலில் சக பேனலிஸ்ட் ஒருவரிடம் மோசமாகப் பேசி, பிறகு வற்புறுத்தல் காரணமாக தாம் பேசியது தவறு என்று மன்னிப்பும் கேட்டார்.

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அவர் அப்படி என்னதான் பேசினார் என்றால்… சக விவாதிப்பாளர் பிரபுல்ல கேத்கரிடம், நீங்க வேணா கன்னியாஸ்திரிய கற்பழிச்சுக்குங்க… உங்களை யாருங்க தடுக்கப் போறாங்க…? என்று கோபாவேசமாகப் பேசி… அங்கிருந்த அனைவரையும் மட்டுமல்ல… நேரலையில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி என்பதால், நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் நெளியச் செய்தார்.!

ஜான் தயாளின் பின்னணி குறித்து அறிந்தால், இவர் சொன்ன வார்த்தைகளின் உள்நோக்கம் நமக்குப் புரிபடும்! ஜான் தயாள் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவர். தன்னைத் தானே மனித உரிமைப் போராளி என்று சொல்லிக் கொள்பவர்.

இரு தினங்களுக்கு முன்னர், டைம்ஸ் நௌ டிவியில் ஒரு விவாதம் நடந்தது. அந்த விவாதமானது, அண்மைய பல்கலை.,பாடம் பற்றி அமைந்தது.

‘ராஷ்டிரசந்த் துகடோஜி மஹராஜ் நாக்பூர் பல்கலை.,’யின் இரண்டாம் ஆண்டு பி.ஏ (வரலாறு) பாடத் திட்டத்தில் ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் வரலாறு குறித்து ஒரு பாடம் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்த விவாதம்தான் டைம்ஸ் நவ் சேனலில் நடந்தது.

விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜான் தயாள் ஆர்எஸ்எஸ்-ஐ இரட்டை முகம் கொண்ட கொலைகார ரகசியக் குழு என்று குறிப்பிட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் மனம் போன போக்கில் தெரிவித்துக் கொண்டே வந்தார்.

இவருடைய அவதூறுப் பேச்சுக்கு பதிலளித்தார், ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசர் இதழின் ஆசிரியர் ப்ரஃபுல்ல கேத்கர். இவர் இதற்கு பதிலடி கொடுத்த போது, நீங்கள் உங்கள் சர்சுகளில் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும், கற்பழிக்கும் பாதிரிகளை இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா..? வழக்கு எதாவது அவர்கள் தொடுத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். மேலும், சர்ச்சுகள் சிலவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டு, அங்கே நடந்த அத்துமீறல்களையும் குறிப்பிட்டார். கன்யாஸ்திரிகளின் கற்பழிப்பில் ஈடுபட்ட பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கல் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை; உங்கள் மனித உரிமை சங்கங்கள் என்ன தூங்கிக் கொண்டிருந்ததா? ஃப்ராங்கோ முல்லக்கல் மீது நடவடிக்கை எடுக்க முனைந்த காவல்துறையையும் கட்டிப் போட்டு, மிரட்டி அல்லவா வைத்திருந்தீர்கள் என்று கேட்டார்.

அவரது இந்த சரமாரியான கேள்விகளால் கடுப்பான ஜான் தயாள், இந்த உண்மைகளுக்குப் பதில் சொல்ல திராணியற்ற நிலையில், விவாதத்தை திசை திருப்பும் நோக்கில், உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஏதாவது ஒரு கன்யாஸ்திரியை கற்பழியுங்கள்; யார் உங்களைத் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்க மாட்டார்கள்… என்று சத்தமாக சொல்லிக் கொண்டே போனார். அவரது பேச்சால், டிவி., நிகழ்ச்சி நெறியாளர் நாவிகா குமார் முதல் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில், ஜான் தயாளின் அருவறுப்பான பேச்சுக்காக உடனே ப்ரஃபுல்ல கேத்கரிடம் ஜான் தயாள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஜான் தயாள் சவ்வ்வ்வாக இழுத்துச் சென்று, இறுதியில் வேறு வழியின்றி, மன்னிப்பு கேட்டார்.

யார் இந்த ஜான் தயாள்?

முதலில் ஒரு கிறிஸ்தவ வெறியர். இடதுசாரி சிந்தனையாளர். கடுமையான மோடி எதிர்ப்பாளர். ஹிந்து மதத்தின் மீது படுபயங்கர வெறுப்பை உமிழ்பவர். இவரது முட்டாள்தனமான வாதங்கள் வட இந்திய ஊடகங்களில் மிகப் பிரபலம்.

நாடு எவரையெல்லாம் கிரிமினல்கள் என்று அச்சத்துடன் ஒதுக்குகிறதோ அவர்களுக்கு எல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு, தன்னை மனித உரிமை ஆர்வலர் என்று கட்டம் போட்டுக் காட்டுவார். இவரை அவ்வப்போது அரனாப் கோஸ்வாமி விவாதங்களுக்கு வரவழைத்து காலை வாருவார். ஆனால் அதற்கெல்லாம் அவர் கொஞ்சமும் கலங்கமாட்டார். வெட்கப் படவும் மாட்டார்.

சிறிது காலத்துக்கு முன்னர் இவர் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். அதற்காக தனி அவதாரம் எடுத்த மகா புருஷன் போல தன்னைக் காட்டிக் கொண்டார். அதை வைத்து, பிரதமர் மோடிக்கு கடிதம்கூட எழுதினார். அதில், சட்டத்துக்குப் புறம்பாக இங்கு குடிவந்திருக்கும் ரோஹிங்யாக்களை நம் பாரதத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது என்று ஆதரித்து கோரிக்கை வைத்தார். ரோஹிங்யாக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டிய வேளையில், தன் கொள்கை வாதத்தில் பிடிவாதமாக இருந்தார்.

ஆல் இண்டியா கிறிஸ்டியன் கௌன்ஸிலுக்கு இவர் பொதுச் செயலாளர். ஆல் இண்டிய கத்தோலிக்க யூனியனின் முன்னாள் தலைவர். 32 பேர் கொண்ட அந்தக் குழுவில்தான் மத வன்முறைத் தடுப்பு மசோதா (கம்யூனல் வயலன்ஸ் பில்) தயாரிக்கப்பட்டது.

ஒருவேளை அந்த மசோதா மட்டும் அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தால், நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு அது ஒரு சாவுமணியாகவே இருந்திருக்கும்!

கட்டுரை மூலம்: https://www.opindia.com/2019/07/john-dayal-times-now-debate/

தமிழில்: எஸ்.பிரேமா

டைம்ஸ் நவ் விவாதத்தில் ஜான் தயாள் கூறிய வார்த்தைகளின் காணொளி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe