Reporters Diary சீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்

சீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்

-

- Advertisment -

சினிமா:

கதாநாயகி இன்றி தொடங்கிய கனவு நாயகனின் பைட்டர் படபிடிப்பு!

விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங், ஹீரோயின் யார் என்று...

சீனியர் சினிமா மற்றும் சீரியல் நடிகை நாஞ்சில் நளினி மறைவு! நடிகர் சங்கம் இரங்கல்!

பழம்பெரும் சினிமா நடிகையும் அண்மைக் காலமாக சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவருமான நாஞ்சில் நளினி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கர்ப்பம் என்றாலும் கலங்காது அடிமுறை கற்ற சினேகா! டெடிகேஷன்!

அவர் தான் இப்படியொரு மிகச்சிறந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதில் என்னை நடிக்கவும் வைத்தார். நடிகர்களுக்கு சவால் தரும் பாத்திரத்தை உருவாக்கி, அதில் நம்மை பிரகாசிக்க செய்வது இயக்குநர்தான்.

சீறு படத்தில் சீறும் சிங்க குட்டி! சிவம் மகாதேவன்!

இந்த படத்தின் பாடலுக்கான பாடல் வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா. அது தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
-Advertisement-

காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!

ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.

மதுரை மெஸ்: காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு 10% தள்ளுபடி!

அவரது மெஸ்ஸில் சிறப்பு சலுகை என போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா., இந்துக் கடவுளரை இழிவுபடுத்திய ஆதாரங்கள் இதோ…!

இதோ உங்களுக்கு ஆதாரம்..இந்து கடவுள்களை நிர்வாணமாக சித்தரித்து நீங்க சேலத்தில் ஊர்வலம் விட்ட காட்சிகள் ..

படபட பட்டாஸாய் சட்டமன்றம்… ‘கொர்’ என தூங்கி வழிந்த ஜெகன்!வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

விவசாயிகளுக்கு உறக்கம் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி எங்குவேண்டுமானாலும் தூக்கம் வருகிறது? என்று நெட்டிசன்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!

ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.

தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை தேவை!

தனியார் பால் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

14 வயது மாணவனோடு மாயமான ஆசிரியை!

இந்நிலையில் மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கட்சி தொடங்கி 40 ஆண்டுகளில்… 11 வது தலைவர்!

ஜனசங்கமாக இருந்து பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக தொடங்கப் பட்டதில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்குள் 11வது தலைவராக தேர்வு ஆகியுள்ளார் ஜே.பி. நட்டார்.

தேர்வுகள் முதற்படி… மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! மோடி அறிவுரை!

தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்ற `தேர்வுக்கு பயம் ஏன்?' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன் படுகொலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைதானதாகக் கூறப் படுகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி; சில சிந்தனைகள்!

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சிதோறும் வழக்கமாக சில விஷயங்கள் நடக்கும். சில பதிப்பாளர்கள் தமது புத்தகங்கள் அமோகமாக விற்றதாகச் சொல்வார்கள். சிலர் நேர்மாறாகச் சொல்வார்கள்.

பரட்ட பத்த வெச்சிட்டாரு..: கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

விலை உயர்ந்த ஆடிக் காரில் வலம் வந்த கிரிக்கெட் ஆட்ட நாயகன்!

இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.
- Advertisement -
- Advertisement -

மூன்றாவது பீரியடு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு. அறிவியல் ஆசிரியை சீதா டீச்சர் எப்போதுதான் வருவாரோ..? அவரைப் பார்க்க வேண்டும்போல இருந்தது முத்துக்குமாருக்கு. முத்துக்குமார் சராசரி மாணவன் தான். ஆனாலும் அறிவியலில் ஆர்வமுள்ளவன். அதனால்தானோ என்னவோ சீதா டீச்சருக்கு முத்துக்குமாரின் மீது தனிப்பட்ட அன்பு. முத்துக்குமார் சென்ற காலாண்டுத் தேர்வில் மற்ற பாடங்களில் சராசரியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அறிவியலில் 78 மதிப்பெண் பெற்றிருந்தான் என்றால் அதற்கு சீதா டீச்சர்தான் காரணம்.

சீதா டீச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. வாரத்துக்கு இரண்டுநாள் தற்காலிக ஆசிரியர்களாக சமூக செயல்பாட்டாளர்கள் என்று சிலர் எங்கள் பள்ளிக்கு வந்து வகுப்பெடுப்பார்கள். எங்கள் வகுப்புக்கு தற்காலிக ஆசிரியராக ட்ராட்ஸ்கி மாஸ்டர் வந்துகொண்டிருக்கிறார். அவரை சார் என்று கூப்பிடக்கூடாதாம். தோழர் என்றுதான் கூப்பிட வேண்டுமாம். கையில் எப்போதும் ஒரு தகர உண்டியலுடன் தான் பள்ளிகூடத்துக்கே வருவார். பார்ப்பதற்கு வாத்தியார் போலவே இல்லை. அழுக்கு பேண்டும் , கசங்கிய ஜிப்பாவும், ஜோல்னா பையும், சிவப்பு அட்டை போட்ட 2 புத்தகமும் வைத்துக் கொண்டு அந்தக் கால ஆங்கிலப்படங்களில் வரும் ஹிப்பிக்கள் போலவே இருந்தார்.

முத்துக்குமாருக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவருடைய அப்பாவும் என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டு உண்டியலில் தினமும் காசு போடுபவர்கள், அவருடைய துண்டு பிரசுரங்களைப் படிப்பவர்களை மட்டுமே முதல் பெஞ்சில் அமரச் செய்தார். காலனி தெருவைச்சேர்ந்த சில மாணவர்களை எதுவுமே கேட்காமல் கடைசி பெஞ்சில் அமரவைத்ததை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

பள்ளிக்கு வந்த முதல் நாளே வட்டி பிஸினஸை ஆரம்பித்துவிட்டார். உண்மையில் அந்த ஊரில் நிறைய பேருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தவர் அதை வசூலிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அந்தப் பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். பலருக்கும் பண்ம் கொடுத்து அதற்கான வட்டியை மாணவர்களை விட்டுத்தான் வசூலித்து வரச் சொல்வார். அவர் ஆசிரியர்-ஊழியர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். எனவே எப்போது பார்த்தாலும் இயக்கப்பணி என்று சொல்லி வட்டிக்குப் பணம் கொடுக்கப் புறப்பட்டுவிடுவார்.

மாணவர்களுக்கு பாடம் எடுக்கவேண்டாமா என்று செல்லம்மா டீச்சர் கேட்டபோது, இந்த களுதைக படிச்சு கிளிச்சு என்ன சாதிக்கப்போவுது? அப்படி படிக்கணும்னா சாயந்திரம் நம்ம இயக்க பில்டிங்ல டியூசன் நடத்துவோம். அங்க வரட்டும். நம்ம இயக்க பசங்க பாடம் சொல்லித்தருவாங்க. மாசம் உண்டியல்ல 1000 ரூவா போடணும். எல்லாக்களுதைகளோட அப்பன்களும் விவசாயம், கடை-கண்ணி, கவர்மண்ட் வேலைன்னு வசதியாத்தான் இருக்கான். ஏளைகளுக்கு பணம் கிடைக்கணும்னா பள்ளிக்கூடத்தில பாடம் எடுக்காம டியூசன் நடத்துவதே அதற்கான ஒரே வழி என்று சொன்னார்.

தவிர நன்றாகப் படிக்கக்கூடிய பாலமுருகனை காரணமே இல்லாமல் திட்டி வெளியே அனுப்புவதையும், அவரது வகுப்பு முடியும் வரை வெளியே நிற்கவைப்பதையும் அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒன்றுமே கேட்கவில்லை… மாணவர்களிடம் விளையாட்டுப் பீரியடில் வட்டிக்கு விடுவது மட்டும் பூர்ஷ்வாத்தனம் இல்லையான்னு எங்கய்யா கேக்காருடா என்று சொன்னான். அதற்குத்தான் மூங்கில் கம்பால் அடித்து அவனை வெளியே நிற்க வைத்தார். அப்பாட்ட சொல்லி எதாச்சும் பிரச்சனை பள்ளிக்கூடத்துக்கு வந்துச்சு பத்தாப்பு பரிச்சை எளுதமாட்ட நீயி என்று மிரட்ட வேறு செய்தார்.

இன்னொருநாள், சாமி கும்பிடுவது பற்றி நக்கலடித்தார்…  சாமி கண்ணக்குத்தும் என்று அகமது சொன்னபோது உன்ன எவண்டா சொன்னது? நீ மசூதிக்கு 5 வேள போ என்றார். அப்ப நானு என்று ஜோசப் கேட்டபோது ”ஃபாதருக்கு தோத்திரம் சொல்லு. பாவமன்னிப்புக்கு அப்பப்ப வருவேன்னு சொல்லிரு”என்று சொல்லி கெக்கெக்கே என்று ஒரு மாதிரியாக இளித்தார். ”எங்க சாமிய மட்டும் ஏன் வையிதீய?” என்று கேசவன் கேட்டபோது ”நீ பெரியார் வாழ்கன்னு நூறு தடவை, மாவோ வாழ்கன்னு நூறு தடவை இம்போசிஷன் எழுது. அதுவரை பள்ளிக்கூடத்துக்கு வராதே” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சீதா டீச்சர் வந்துட்டா எல்லாமே பழையபடி சரியாகிடும் என்ற நம்பிக்கைதான் முத்துக்குமாரை ஆசுவாசப்படுத்தியது.

ட்ராட்ஸ்கி தோழர் எடுக்கும் பாடங்கள் எதுவுமே புரிவதில்லை. அவர் பாடமே நடத்தமாட்டார். ரஷ்யா, சீனா பற்றித்தான் பேசுவார். அப்படித்தான் ஒருநாள் ரஷ்யாவில் வானில் இருந்து தங்கக்கட்டி கொட்டியது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ”அறிவியல் வகுப்பில் ஃபேண்டஸி கதை சொல்கிறீங்களே சார்?” என்று தனபால் வாத்தியார் கேட்டதற்காக அவரை தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டி அடித்து ரத்தம் வந்துவிட்டது. தனபால் சார் மெடிக்கல் லீவ். அவருக்கு பதில் வேறொரு தோழர் வந்துள்ளார். இவர் அவரை லூசு என்று கூப்பிடுகிறார். அந்த புது தோழர் பேர் நிக்கோலய் நலங்கிள்ளியாம்.

சென்ற வாரத்தில் ஒருநாள் புரட்சி ஓங்குக என்று நாற்காலியில் ஏறி நின்று கத்தியவர் எங்களையும் பெஞ்சில் ஏறி நிற்கச் சொன்னார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வந்ததும் எல்லா ஏழைகளும் நேரா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு குடிபெயர்ந்து விடலாம் என்றெல்லாம் உணர்ச்சி பூர்வமாக விவரித்துக் கொண்டிருக்கும்போது தற்செயலாக உள்ளே வந்த பியூன் மாணிக்கவேல் (வேலு அண்ணன்) ”என்னங்க சார் இது நெசமா? அப்ப ராமதாஸ் கட்சி ஆட்சிக்கு வந்துருமா?” என்று கேட்டதுதான் அவர் செய்த தவறு. அதற்கு  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறேன் பேர்வழி என்று அவரை வகுப்பில் அத்தனை பேரின் ரிக்கார்டு நோட்டையும் தூக்கிக்கொண்டு கிரவுண்டை 10 தடவை சுற்றி வரச்செய்தார். வேலு அண்ணன் முட்டிவலி என்று ரெண்டு நாள் லீவு போட்டதற்கு கெட்டவார்த்தை சொல்லி “அவன் என்ன பெரிய கவர்னர் வேலையா பாக்குறான்?” என்று கத்தினார்.

இப்படி எல்லை மீறிக்கொண்டிருந்த இவரது அட்டூழியங்களை பிரின்சிபாலிடம் புகார் சொன்ன சீதா டீச்சரை வேறொரு தோழர் தீமிதி அழகேசன் (எம்பிக்கு வேண்டியவராம்)  ஒரு வாரம் லீவில் போகச் சொன்னார். “நீங்க யார் சார் சொல்றதுக்கு” என்று சீதா டீச்சர் கேட்டதும், அவர் மீது சத்துணவு முட்டை ரெண்டை வீட்டுக்குக் கொண்டு போனார் என்று புகார் சொன்னார் அந்த தீமிதி. சீதா டீச்சர் ஒரு வாரம் வரமாட்டார் என்று பிரின்சிபால் கையழுத்துடன் நோட்டிஸ் போர்டில் பேப்பரில் ப்ரிண்ட் எடுத்து ஒட்டினார்கள்.

இதைக் கேட்டுக் கடுப்பான அகமது அவரை பீமிதி அசிங்கேசன் என்று சொல்லிவிட்டான். அவனது தந்தை மறுநாள் வந்து அசரத்து உங்கள பாத்து பேசச்சொன்னாரு என்று சொல்ல, அவரிடம் அந்த தீமிதி எகிறிய விதம் ஏதோ அவர் அப்பன் வீட்டுச் சொத்தை கறிக்கடை கரீம்பாய் (அகமதுவின் அப்பா) ஆட்டையப் போட்டது போலத் தோன்றியது. ஒரு வாரம் உம்மவன் வெளியதான் நிப்பான். இல்லாட்டி டிசி வாங்கிக்க என்று கூவினார் தீமிதி.

இன்றோடு ஒரு வாரம் முடிந்தது. இன்றைக்காவது சீதா டீச்சர் வருவாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமாருக்கு மீண்டும் ஏமாற்றம். தோழர் ட்ராட்ஸ்கிதான் இன்றும் வந்திருக்கிறார். வழக்கம்போல பாடத்துக்குச் சம்மந்தமில்லாமல் பினாத்திக்கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த பரமசிவத்திடம் கேட்டான் முத்துக்குமார்.

“ஏண்டா இன்னிக்கும் சீதா டீச்சர் வல்ல?”

“அவங்க வேலைய ரிசைன் பன்னிட்டு போய்ட்டாங்களாண்டா”

இனி எப்போதும் தனக்கு கடைசி பெஞ்சுதான் என்று நினைக்கும்போது அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இது எதுவுமே தெரியாமல் சீதா டீச்சர் வந்து தன்னை உள்ளே அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் பாலமுருகன்.

#வரைவு முற்போக்கு கலவிக்கொள்கை#

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
197FollowersFollow
747FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

வித்தியாசமா செய்யுங்க வேர்கடலை ஸ்ட்யூ!

இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வடிகட்டிய வேர்க்கடலை – தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

ஆரோக்கிய உணவு: கம்பு காய்கறி கொழுக்கட்டை!

கம்பு காய்கறி கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : கம்பு மாவு ...

மாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி!

தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |