Home அடடே... அப்படியா? வருமான வரிக் கணக்கு நாளைக்குள் தாக்கல் செய்யாவிட்டால்… ரூ.10 ஆயிரம் அபராதம்!

வருமான வரிக் கணக்கு நாளைக்குள் தாக்கல் செய்யாவிட்டால்… ரூ.10 ஆயிரம் அபராதம்!

income tax e1603558971942

நாளைக்­குள் வரு­மான வரிக் கணக்­கை தாக்­கல் செய்­யா­விட்­டால், கடந்த ஆண்­டை­விட இரு­ மடங்கு அதி­க­மாக அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள் அத்துறையினர்!

வரு­மான வரி கணக்­கைத் தாக்­கல் செய்­வ­தில், கடந்த ஆண்­டுக்­கும் இந்த ஆண்­டுக்­கும் இடையே முக்­கி­ய­மான வேறுபாடு, உரிய காலக்­கெ­டு­வுக்­குள் தாக்­கல் செய்யவில்லை என்றால், விதிக்­கப்­படும் அபராதம் இரு மடங்கு என்பது தான்.  கடந்த ஆண்டு அபராதம் ரூ. 5 ஆயி­ரம் ஆக இருந்­தது. இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் என அதிகரிக்கப் பட்டுள்ளது. 

எனினும், உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம் அதா­வது, தகு­தி­யான கழி­வு­கள் மற்­றும் வரி விலக்­கு­களைக் கோரிய பிற­கான வரு­மா­னம்  ரூ.5 லட்­சத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே  அபராதம்  வசூலிக்கப் படும். அதே நேரம், உங்­கள் நிகர மொத்த வரு­மா­னம் குறிப்­பிட்ட நிதி­யாண்­டில்  5 லட்­சத்­துக்கும் குறைவாக இருந்­தால்  ரூ.1000 அபராதமாக வசூலிக்கப் படும். 

கொரோனா கால சலுகையாக, இம்­முறை வருமான வரிக் கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு டிச. 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது. எனவே, ஜன.1ஆம் தேதி முதல் மார்ச் இறு­திக்­குள் தாக்­கல் செய்­தால், ரூ.10 ஆயி­ரம் அப­ரா­தம் செலுத்த வேண்டியிருக்கும். 

எனவே, இரு மடங்கு அப­ரா­தத்தை தவிர்க்க, நாளைக்­குள் வரு­மான வரி படி­வத்தை தாக்­கல் செய்வது­ நல்லது

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version