― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அடுக்கடுக்காய் அறிமுகம்.. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ.. சிறப்புக்கள்!

அடுக்கடுக்காய் அறிமுகம்.. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ.. சிறப்புக்கள்!

- Advertisement -

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus இன் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான போர்ட்போலியோ வரைபடத்தில் மிகப் பெரிய மாற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சமீபத்தில் ஒரு டிப்ஸ்டர் தனது புதிய அறிக்கையின் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலின் படி, ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதும் பின் தொடரும் அதன் வழக்கத்தை விட அதிகமான சாதனங்களை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒன்பிளஸ் நிறுவனம் 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus அதன் ஆரம்ப நாட்களில் வருடத்திற்கு ஒரு ஸ்மார்ட்போனை மட்டுமே அறிமுகப்படுத்தியது. பின்னர் அதன் புதிய சாதனங்களின் அறிமுக எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்தது.

இதில் T சீரிஸ் தொடர் சாதனங்கள் அடங்கும். படிப்படியாக அதற்குப் பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆண்டுக்கு நான்காக எண்ணிக்கையை அதிகரித்தது.

இப்போது Oppo மற்றும் புதிய Nord தொடர் சாதனங்களுடன் நிறுவனம் இணைந்ததன் மூலம், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அறியப்பட்ட டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார், 2022 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கான காலக்கெடு குறித்த யோசனையைப் பகிர்ந்துள்ளார். ஒன்பிளஸ் ஏற்கனவே சில சாதனங்களை 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிப்ஸ்டரின் பட்டியல் படி மார்ச் மற்றும் மூன்றாம் காலாண்டிற்கு இடையில் குறைந்தது ஆறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் பிரிவில் Nord மாடல்களின் வாரிசு சாதனங்களை பட்டியலில் குறிப்பிடாததால், பிராண்ட் அதிக மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் வழங்கிய பட்டியலின்படி, ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் சிஇ2 லைட் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.

OnePlus Nord 2T ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 10R மற்றும் OnePlus Nord 3 முறையே மே மற்றும் ஜூலை மாதங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Nord 3 ஆனது OnePlus Nord Pro ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம்.

கடைசியாக, OnePlus 10 Ultra அல்லது ஒருவேளை OnePlus 10 Pro+ இந்த Q3 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அதன் சமீபத்திய அறிமுகத்தில், OnePlus 10 Pro ஆனது 6.7′ இன்ச் கொண்ட QHD பிளஸ் 1,440 × 3,216 பிக்சல்கள் உடைய வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது 20.1:9 விகிதத்துடன் 1Hz மற்றும் 120Hz வரையிலான டைனமிக் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 1300 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அடுக்குக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டுள்ளது.

இந்த சாதனம் இரட்டை நானோ சிம் ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 12 மூலம் ColorOS 12.1 உடன் இயக்கப்படுகிறது.

இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 சிப்செட்டில் இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 256 ஜிபி உள் சேமிப்பிடத்தை வழங்குகிறது.

கேமரா தொகுதி பற்றிப் பார்க்கையில் OnePlus 10 Pro மூன்று பின்புற கேமரா அமைப்புடன் 48MP முதன்மை சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 8MP டெலிஃபோட்டோ சென்சார் மூலம் வருகிறது.

இந்த சாதனம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவையும் கொண்டுள்ளது.

OnePlus 10 Pro விலை (எதிர்பார்க்கப்படும்)
இந்த புதிய OnePlus 10 Pro சாதனத்தின் முன்புறம் 32MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இந்த OnePlus 10 Pro சாதனம் 5,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

இது 80W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இந்த சாதனத்தின் இந்திய மாறுபாட்டின் விலை சுமார் ரூ. 54,590 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 10 Pro சாதனத்தின் விற்பனை ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version