தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,775க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வேதேச சந்தையில் ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,695 டாலரில் இருந்து 1,680 டாலராக குறைந்துள்ளது. சர்வேதச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
