
ஆபரண தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இதனால் தீபாவளிக்கு தங்கம் வாங்க நினைத்த மக்கள் கவலையில் உள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.
இந்நிலையில், தங்கம் விலை இன்று (அக்.22) உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,368-க்கு விற்பனையாகிறது. இதேபோல, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.63,200-ஆக இருக்கிறது.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்கள் நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டும் சூழலில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்ததால் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது.