- Advertisement -
Home வணிகம் தொடர் சரிவில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சி- எல்ஐசி விளக்கம்..

தொடர் சரிவில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சி- எல்ஐசி விளக்கம்..

தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்!அதானி குழும பங்குகள் வீழ்ச்சி தொடர்பாக எல்ஐசி நிறுவனம் அதன் வாடிக்கையாளர் சேவை நலன் கருதி விளக்கமளித்து உள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், 4வது நாளாக தொடர்ந்து இன்று சரிவடைந்துள்ள நிலையில் அதானி குழுமத்தில் இதுவரை ரூ.30,127 கோடி அளவிற்கு பங்குகள் வாங்கி இருப்பதாகவும்,அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் இல்லை.இதுவரை ரூ. 36,474.78 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு ரூ. 56,142 கோடியாக உயர்ந்துள்ளது என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) விளக்கமளித்து உள்ளது.

இன்று பங்கு வர்த்தகம் துவஙகியதுமே அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், 4வது நாளாக தொடர்ந்து இன்று சரிவடைந்துள்ளது.அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடுமையாக இன்று சரிவைகண்டது.அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறிவரும் நிலையில் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் இருப்பது வழக்கமானது என்றாலும் அடுத்தடுத்து சரிவை சந்தித்து வரும் அதானி குழும பங்கு கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு: எல்.ஐ.சி. விளக்கம் அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவின் ‘நம்பர் 1’ கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.

தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது. அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது. இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு’ என்று தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

eleven − 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version