இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த, 5 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதுநகை வாங்குவோர் மத்தியில் சற்று ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது .
தங்கம் விலை, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.அன்றைய தினம் மட்டும் சவரன் ரூ.720க்கு உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. இது, நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. பிப்ரவரி 14ம் தேதி சவரனுக்கு ரூ. 40, பிப்ரவரி 15ம் தேதி ரூ.120, பிப்ரவரி 16ம் தேதி ரூ. 280 என விலை குறைந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் குறைந்தது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,250க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,000க்கும் விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த 13ம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 வரை குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.