23/09/2019 2:46 PM

உலக அளவில் இந்தியா பின்தங்க இந்த 5 மாநிலங்களே காரணமாம்!
புது தில்லி: உலக அளவில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு, உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் கூறியுள்ளார்.

தில்லியில் உள்ள ஜாமியாமிலியா இஸ்லாமியா பல்கலை.,யில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவுச் சொற்பொழிவுக் கூட்டத்தில் பேசியபோது, அமிதாப் கந்த் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகின்றன. பீஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்கள், உலகளவில் சமூக முன்னேற்ற விஷயத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

தொழில்கள் முன்னேற்றம் இருந்தாலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டுப் பட்டியலில் பின்தங்கிய நிலையிலேயே நாம் உள்ளோம். இந்தப் பட்டியலில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதில் 131வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கல்வி, சுகாதாரத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.

மாணவர்களின் கற்றல் திறன் மிக மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு பயிலும் மாணவனால், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்கக் கூட முடியவில்லை. அடுத்து, குழந்தைகள் இறப்பு விகிதம். இதுவும் மிக அதிகம்.  நாம் இந்தத்  துறைகளில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது… என்று கூறினார் அவர்.Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories