இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்து ரூ. 80.59 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் விலை ஏறி வரும் பெட்ரோல் விலை மறுபடியும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.80 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari