spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள்..! டிசம்பருக்குள் ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் ஹெச்.ராஜா!

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள்..! டிசம்பருக்குள் ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் ஹெச்.ராஜா!

- Advertisement -

03 Nov012 petrolசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் விலையேற்றத்தைச் சந்தித்தது. இதனால் வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றதால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் குறைந்து வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாக உள்ளது.

இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்கிறது. அமெரிக்க அதிபர் ஈரான் இறக்குமதியை தடை செய்ய முயற்சித்தார். அதனால் உலக சந்தையில் விலை ஏறியது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. அடைந்தது இப்போது அமெரிக்கா அப்படிச் செய்ய வில்லை. எரிபொருள் விலை குறைகிறது. இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய, இந்திய ரூபாய் பரிவர்த்தனையை செய்ய முடிவு செய்தது. தற்போதுஉற்பத்தி வரியில் 2.50 ரூபாய் மத்திய அரசு குறைத்தது. இதற்கு சமமாக சில மாநிலங்களும் தங்கள் வரியைக் குறைத்த்ன. பொது மக்களும் பைக் கார் உபயோகத்தை குறைத்து பெட்ரோல் சிக்கனம் கடை பிடித்தால், மேலும் விலை குறையும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

இதனிடையே, வரும் டிசம்பருக்குள் பெட்ரோல் விலை ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளவை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe