பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரான் அதிபர்

புது தில்லி : இந்திய ரூபாயை அளித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் – இந்தியா இடையே கையெழுத்தானது. இது சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கும் மோடிக்கும் கிடைத்த மிகப் பெரிய திருப்புமுனை என்று கூறப் படுகிறது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிலிருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவ.4 ஆம் தேதிக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் பொருளாதாரத் தடை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார். 

ஆனால், இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்தது. அமெரிக்க டாலரில் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பொருளைக் கொடுத்து அளவு குறைந்த நிலையிலும் எண்ணெய் வர்த்தகத்தை தொடர விரும்பியது.  இந்நிலையில் தனது நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது.

இத்தகைய சூழ்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, அதற்கான தொகையை அமெரிக்க டாலராக செலுத்தாமல் இந்திய ரூபாயாக செலுத்த இந்தியா – ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு பதிலாக பாதியளவு பொருட்களை ஈரானுக்கு அளித்தும்,  மீதத் தொகையை ரூபாயாக செலுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஈரான் தேசிய கச்சா எண்ணெய்க் கழகத்தின் யூகோ வங்கிக் கணக்கில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொகையை செலுத்தும்.

டாலருக்கு பதிலாக ரூபாயாக வர்த்தகத்தை மேற்கொள்வதால், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்! இந்தியா கச்சா எண்ணெய்க்கே அதிக அளவில் டாலரை செலுத்தி வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது இனி தவிர்க்கப் படும்!

ரஷ்ய, சீன கப்பல் நிறுவனங்கள், இந்திய ஈரான் வர்த்தகத்தை ஊக்கப் படுத்தியுள்ளன. அமெரிக்காவின் ஒப்புதலின் கீழ் இந்தியா ஈரானுக்கு விவசாயம் சார்ந்த பொருள்கள், உணவு வகைகள், மருந்துகள், மருந்து உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும். ஆனால், பெட்ரோலிய பொருள்கள், பெட்ரோ வேதிப் பொருள்கள், ஆட்டோமொபைல்ஸ், இரும்பு, கிராஃபைட், உயர் உலோகங்கள் ஆகியவற்றை டெஹ்ரானுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது! இந்த ஒப்பந்தத்தின் கீழ் இனி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும்.

முன்னதாக, கச்சா எண்ணெய்க்கான தொகையில் 55 சதம் யூரோவாகவும், 45 சதம் ரூபாயாகவும் செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. பின்னர், யூரோவுக்கு பதிலாக 50 சதம் அத்தியாவசியப் பொருள்களாகவே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

India will import crude oil from Iran using a rupee-based payment mechanism, an industry source involved in discussions told Reuters on Thursday, adding that 50 percent of those payments will be used for exporting items to Tehran. State-owned UCO Bank is expected to announce the payment mechanism in the next 10 days, the source said.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...