-Advertisement-
Home சினிமா

திரை விமர்சனம்: காஞ்சனா 2

Kanchana-200007 தமிழில் சீரிஸ் படங்கள் வருவது அரிது. அப்படி வந்தாலும் பல படங்கள் முந்தைய படங்களை விட வெற்றியடைவதில்லை. நடிகரும், இயக்குநரமான ராகவா லாரன்ஸ் முனி பட வரிசையில் முன்றாவதாக காஞ்சனா 2 இயக்கியுள்ளார். தன்னுடைய முதல் 2 படங்களான முனி மற்றும் காஞ்சனா ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று மாபெறும் வெற்றியடைந்த படங்கள். அந்த எதிர்பார்ப்பினை காஞ்சனா 2-வில் லாரன்ஸ் தக்கவைத்து கொள்கிறாரா என்ற ஆர்வத்தில்தான் படத்தை பார்த்தேன், தக்கவைத்துவிட்டார் லாரன்ஸ் என்றே சொல்ல வேண்டும். கதை இதுதான், கதாநாயகி டாப்ஸி வேலை செய்யும் கிரீன் டிவி சேனல் முதலிடத்தை இழந்து 2ஆம் இடத்திற்குத் தள்ளப்படுகிறது. இதனால் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை முதலுக்கு கொண்டுவர பரபரப்பாக எதையாவது செய்ய வேண்டும் என நிர்வாகம் தீர்மானிக்கிறது. அதற்காக பேய் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கத் திட்டமிடுகிறது அந்நிறுவனம். இதனால் மகாபலிபுரத்திலுள்ள பாழடைந்த பங்களா ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே இல்லாத பேயை இருப்பதுபோல் காட்டி டிஆர்பியை எகிற வைக்கத் திட்டம் போடுகிறார்கள். நிகழ்ச்சியின் இயக்குனர் டாப்ஸி, கேமராமேன் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட கிரீன் டிவி டீம் அந்த பங்களாவிற்குப் போகிறது. அங்கே போனபிறகு நடக்கும் அதிரடி, அமானுஷ்ய அனுபவங்களே ‘காஞ்சனா 2’. காஞ்சனா’வில் நடித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரது நகைச்சுவை கூட்டணி இதிலும் தொடர்கிறது. ஆனால், இதில் குறிப்பிடப்பட வேண்டியது டாப்ஸியின் நடிப்பு. பல திரைப்படங்களில் மரத்தை சுற்றி டூயட் பாடி வந்த டாப்ஸி, காஞ்சனா 2-வில் நடிப்பில் பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார். அதேபோல இரண்டாம் பாதியில் வரும் நித்யா மேனன் மாற்றுத் திறனாளி கேரக்டரில் வந்து மனதை உறுக்குகிறார். ராகவா லாரன்ஸ் இதில் வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து தனது நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டுகிறார். அதுவும், ஒரு சிறுமியாக வந்து அவர் ஆடிப்பாடி பயமுறுத்துவது டாப் கிளாஸ். காஞ்சனா 2-வின் முக்கியமான பலம் அதன் பிண்ணனி இசை. தமன் மற்றும் சத்யாவின் பிண்ணனி இசை திகிலையும். வாயா வீரா பாட்டு மெலடியில் சொக்கி ரசிக்க வைக்கிறது. கடும் சவால்கள் நிறைந்த ஒளிப்பதிவவை சிறப்பாக செய்திருக்கிறார் ராஜவேல். இதுபோன்ற அமானுஷ்ய படங்களுக்கு படத்தொகுப்பு மிகவும் முக்கியம். விறுவிறு பரபர காட்சிகளை சிற்பபாக செய்து முடித்து இறைவனடி சேர்ந்துவிட்டார் மறைந்த கிஷோர். எல்லா படத்திலும் குறை இருக்கத்தானே செய்யும். காஞ்சனா 2-வில் முன்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம்பாதியில் இல்லை என்றே கூற வேண்டும். அதற்கு காரணம் அழுத்தமில்லா ப்ளாஷ் பேக். யூகிக்க கூடிய சில காட்சிகள். இவை அனைத்தும் இருந்தாலும் நகைச்சுவை படத்தை இழுத்துக்கொண்டு செல்கிறது. மேலும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சியின் நீளமும் சற்று அதிகம். முடிவில் முனி பட வரிசையின் 4-ஆம் பாகத்துக்குக்கான போஸ்டர் காட்டப்பட்டது. ஒரு சில குறைகள் இருந்தாலும், மக்களை குஷிப்படுத்தவதில் இந்த காஞ்சனா 2 கோட்டை விடவில்லை. இந்தப் படம் மாஸ் இல்லை…. பக்கா மாஸ்… திரை விமர்சனம்: தர்மா

Show comments