சென்னை: செம ஹாட்டாக பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நிகிஷா படேல்.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நிகிஷா படேல். பிபிசி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அவரை சினிமாவுக்கு அறிமுக்ம் செய்தது ஆந்திர திரையுலகம். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் ‘தலைவன்’, ‘என்னமோ ஏதோ’, ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்தார். அத்தனையும் தோல்விப் படங்களாகச் சறுக்கின.
அதன் பிறகு தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் அவர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். வாய்ப்பு தேடலுக்காக நிகிஷா படேல் தற்போது புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
இப்போது எந்தப் புதுப்படமும் இல்லை. நிகிஷா பட்டேல், நல்ல அழகும் கிளாமரும் கொண்ட ஒரு நடிகை தான் என்றாலும் நல்ல பட வாய்ப்புகள் அவருக்குக் கைகூடவில்லை. அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும் நடிகை இவர்.
அதன் ஒரு பகுதியாக செம ஹாட்டாக ஒரு பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். பிகினி போட்டோஸ் நிகிஷாவின் இந்த போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இந்த போட்டோக்களை பதிவிட்டதற்காக நிகிஷாவுக்கு அவரது ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ‘சோ ஹாட்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது தான் புது டிரெண்ட் பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் இப்போது பாலோ செய்யும் ஒரே டிரெண்ட், தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான். அப்படி செய்தால் பட வாய்ப்புகள் தங்களை தேடி வரும் என அவர்கள் நம்புகின்றனர்.
ராய் லட்சுமி, காஜல் அகர்வால், ஹன்சிகா, ஐஸ்வர்யா தத்தா, ரம்யா பாண்டியன் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் புதிதாக இணைந்திருக்கிறார் நிகிஷா படேல்.
உங்கள் வாழ்க்கையில் வளைவுகள் வரலாம்.. அவற்றைத் தழுவிக் கொள்ளுங்கள்.. அதற்காக வெட்கப்படாதீர்கள்’ என ஒரு பொன்மொழியையும் சொல்லியிருக்கிறார் நிகிஷா. அதோடு ‘பிகினி’ கேவலமான உடை இல்லை என்றும் முன்பு கூறியிருக்கிறார் என்ப்து குறிப்பிடத்தக்கது.