
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் நடித்து வெளியான படம் அவன் இவன். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மது ஷாலினி.
பின், அவர் பதினாரு என்ற படத்திலும் நடித்தார். அதன் தொடர்ச்சியாக கமல் படமான தூங்காவனம் படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவுமே இல்லை.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், வாய்ப்பை உருவாக்குவதற்காக எல்லா நடிகைகளும் செய்யும் போட்டோ ஷூட் நடத்துவதை, மது ஷாலினியும் நடத்தி இருக்கிறார்.
வழக்கம் போல கவர்ச்சியை மூலதனமாக வைத்து நடத்தப்பட்டிருக்கும் போட்டோ ஷூட்டில், நடிகை மதுஷாலினி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
அப்படி எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட்டில் இருந்து ஒரு சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, வாய்ப்புக்காக காத்திருக்கிறார் மது ஷாலினி.