
ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் – ஒத்த செருப்பு. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ராம்ஜி. செப்டம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது.
பார்த்திபன் இயக்கியுள்ள இந்தப் படத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டியுள்ளார். இதுகுறித்த விடியோ பதிவில் அவர் கூறியதாவது:
அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் என்கிற சிறப்புகளுடன் வெளிவரும் உலகின் முதல் படம் என்கிற பெருமையைத் தமிழ்த் திரையுலகுக்கு அளித்ததற்குப் பாராட்டுகள்.
இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு விருதுகள் இல்லை என்கிற குறையை இந்தப் படம் போக்கும். இதற்கு அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்யவேண்டுமோ அதனை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம் என்று அவர் பேசியுள்ளார். பார்த்திபன் இதற்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அரசு மரியாதையென்பது
— R.Parthiban (@rparthiepan) September 17, 2019
அதிக கௌரவத்திற்குரியது!
நன்றி மாண்பு மிகுந்தவருக்கு! pic.twitter.com/bV3FQxvfot