
நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று இளையதளபதி விஜய்யின் தந்தை கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் நீண்ட காலமாக சினிமா துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் “கேப்மாரி” என்ற திரைப்படத்தை 70-ஆவது படமாக இயக்கி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி வெளிவந்துள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற திரைப்படம் வெகுவாக கோலிவுட்டில் பேசப்பட்டு வந்துள்ளது. இந்தப்படத்தின் 8-வது நாள் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திரைத்துறையை சார்ந்த பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். அதில் எ.எல்.விஜய், அஜயன் பாலா, எழில், ரமேஷ் கண்ணன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ராம்ஜி, ஆர்.வி.உதயகுமார், போப்பிட தனஞ்செயன், எஸ்.ஏ.சந்திரசேகர், சீனு ராமசாமி ஆகியோர் பார்த்திபனை பாராட்டினார்கள்.
இதில் கலந்து கொண்ட சந்திரசேகர் பேசுகையில், நான் பார்த்திபனுடைய அலுவலகத்திற்கு சென்று அவருடைய காலில் விழுந்து, தயவு செய்து என்னை உங்கள் அஸிஸ்டெண்ட் டைரக்டராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். வயதானாலும் பரவாயில்லை. என்னை ஒதுக்கி விடாமல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன்.
நான் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் கமர்ஷியலாக படம் எடுக்கும் இயக்குனர். என்னை அவர் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டால் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வேன். பார்த்திபன் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். ஒரு படத்திலாவது அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டரா, சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கணும் என்று பேசினார்.
இந்தப்படத்திற்கு மட்டும் மத்திய அரசின் விருது கிடைக்காவிடில் மத்திய அரசின் மீது உள்ள நம்பிக்கையே நான் இழந்து விடுவேன்” மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம். என்றுக் கூறினார்.
இதேபோன்று இயக்குநர் சங்க தலைவரான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “இந்த படத்திற்கு மத்திய அரசின் சிறந்த படம் என்ற விருது கிடைக்காவிடில் தமிழ் திரையுலகினர் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார்.
கல்லி பாய் திரைப்படம், ஹாலிவுட் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்போது, ஒரிஜினல் தமிழ் படமான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை விருதுப் பட்டியலில் சேர்க்காமல் உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பியது வேதனையளிக்கிறது என்று கூறினார்.
பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இயக்குனர் சீனு ராமசாமி பார்த்திபனின் உச்சந்தலையிலும் கைகளிலும் முத்தமிட்டு அவரின் பாராட்டுகளை தெரிவித்தார்.