
குழந்தைகள் செக்ஸ் வைத்துக்கொள்வதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்பட வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களை 5க்கும் 10க்கும் அலைபவர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
அதனை தொடர்ந்து சக நடிகையான டாப்ஸியிடமும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் தலைவி படத்தில் நடிக்க இருக்கும் கங்கனா, அண்மையில் மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்று வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள கங்கனா உடலுறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது பெற்றோர் தங்களின் குழந்தைகள் செக்ஸ் வைத்து கொள்ள விரும்பினால் அதற்கு தடை போடாமல் குழந்தைகள் பொறுப்பான செக்ஸ் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “உடலுறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் உடலுறவை விரும்பும் போது அதை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெறித்தனமாக இருக்காதீர்கள்.
செக்ஸ் வேண்டுமென்றால் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி உங்களிடம் கூறப்பட்ட ஒரு காலம் இருந்தது, உங்கள் உணர்ச்சிகள் அந்த நபரை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது. வரலாற்றில் படையெடுப்புகளால் மக்கள் அந்த எண்ணத்தில் இருந்தனர். நம்முடைய வேதங்கள் உடலுறவை அனுமதிக்கவில்லை.
குழந்தைகள் உடலுறவு கொள்வதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பான உடலுறவு கொள்ள அறிவுறுத்த வேண்டும். நான் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் குழந்தைகளை உடலுறவு கொள்ள ஊக்குவிக்க வேண்டும்,” இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது