கோலிவுட் படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் என அசத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகை மீரா மிதுனுக்கு மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ராசியில்லாத ஒன்றாகிவிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீரா மிதுனுக்கு எல்லாமே நெகட்டிவாக நடைபெறுகிறது. முதலில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அக்னிச்சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கோபமடைந்த அவர், கோலிவுட்டை விளாசியதோடு தமிழகத்தில் தமிழனுக்கு வாழ வழியில்லை என்று தமிழ்நாட்டுக்கு டா டா சொல்லி டிவிட்டியிருந்தார்.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடிக்க மும்பை சென்றுள்ளார் மீரா மிதுன். மும்பையில் அவர் டெஸ்ட் ஷுட் முடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஏற்பாடு செய்த மீரா மிதுனின் நண்பர் வங்கக்கடல் சுனாமி திறமைக்கு நோ சொன்ன நிலையில் அரபிக்கடல் திறமையை வரவேற்றுள்ளது. மீரா மிதுன் என்ற திறமை சரியான கரையை தாக்கும் என பதிவிட்டு மும்பை பீச்சில் இருந்து மீரா மிதுன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tsumnai of bay of Bengal says no to talents and Arabian welcomes talents. @meera_mitun the talent hits the right shores pic.twitter.com/oMDWtbwA2T
— kaul brahmin (@bismivalaipechu) October 10, 2019