தமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்! நயனைத் தாக்கிய சிரஞ்சிவி!

தமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்! நயனைத் தாக்கிய சிரஞ்சிவி!

chranjeevi

கோலிவுட் முதல் பாலிவுட் வரை புதிய படங்களுக்கு புரமோஷன் அதாவது பட ரிலீஸுக்கு முன் அப்படம் பற்றிய தகவல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் பிரபலப்படுத்துவது என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். பல நடிகைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வரும் நிலையில் நடிகை நயன்தாரா மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறார்.

9thara

இதை பட இயக்குனர்கள் தங்கள் படத்துக்கு இழப்பாகவே கருதுகின்றனர். சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியானது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவை அழைத்தபோது வரமறுத்துவிட்டார்.

இது சிரஞ்சீவிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதேபடத்தில் நடித்த தமன்னா அப்படத்தின் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

நயன்தாரா பங்கேற்காததுபற்றி அமைதி காத்து வந்த சிரஞ்சீவி ஒரு கட்டத்தில் மனக்குமுறலை வெளிப்படுத்தினார். நயன்தாரா மீது நேரடியாக குறை கூறாமல் தமன்னாவை தூக்கி வைத்து பாராட்டினார்.

thamanna

இதுபற்றி சிரஞ்சீவி கூறும்போது,’படத்தில் நடித்த மற்றொரு ஹீரோயின் (நயன்தாரா) புரமோஷன்களுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டார்.

அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு நேரங்களில் நடந்த இப்படத்தின் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் தமன்னா கலந்து கொண்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

தமன்னா கமர்ஷியில் நடிகை மட்டுமல்ல, அதையும் தாண்டி நடிப்பு திறமை மிகுந்தவர் என்பதை சைரா படத்தில் நிரூபித்திருந்தார். அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு அவர்தான் உதாரணமாக இருக்கிறார்’ என்றார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :