
ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் ஆடை படத்தில் அமலா பால் போன்று துணிச்சலாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்வது போல் படமும் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் நடிகைகள் செய்ய தயங்கும் விஷயத்தை துணிச்சலாக செய்து அமலா பால் அப்ளாஸ் அள்ளினார். ஆடை படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டினர்.
இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.
தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.
ஆனால் கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். எனவே அவர் ஆடை ரீமேக்கில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் முகேஷ் பட் அறிவித்துவிட்டார்.
இதனால் இந்தி ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக காமினி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.
தமிழை விட பாலிவுட் படங்கள் கொஞ்சம் கவர்ச்சி தாராளமாகவே இருக்கும். பாலிவுட் நடிகைகளும் திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, கவர்ச்சியாக ஆடை அணிவது வழக்கம். இப்போது எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தி படங்களிலும் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகின்றன. அவற்றிலும் கூட நடிகைகள் துணிச்சலாகவே நடித்து வருகின்றனர்.
அதோடு சமூக வலைதளங்களிலும் தங்ளுடைய பிகினி, அரை நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வளவு தாராளமாக, பரந்தமனப்பான்மையுடன், துணிச்சலாக செயல்படும் பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.