Home சினிமா சினி நியூஸ் லாஜிக் லாஜிக் லாஜிக்! கேள்வியில் மிரண்ட மிஷ்கின் சைக்கோ ஆனாரா?

லாஜிக் லாஜிக் லாஜிக்! கேள்வியில் மிரண்ட மிஷ்கின் சைக்கோ ஆனாரா?

mishkin 1

இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை” என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளார்.

மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இறுதியில் அவனை மன்னிப்பது போல் படம் முடியும்.

இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், 60 பேட்டிகளை முடித்துவிட்டு நேற்று தான் பேசாமல் இருந்தேன்.

4 கேள்வி தான், அதை 4 ஆயிரம் முறை மாற்றி மாற்றி சொன்னேன். சமூகத்தில் நடக்கும் லாஜிக் பிரச்னைகள். இதில் மிரண்டு போய் உள்ளேன். ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான்.

தன் பக்கமும் நியாயம் இருப்பதாக எண்ணி ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன், ராமன் கூட இணைகிறான். தனக்கு சாப்பாடு போட்டு உடலை வளர்த்த அண்ணன் ராவணன் கூட இருப்பேன் என்கிறான் கும்பகர்ணன். ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான்.

இவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை என்றார்.

ராமாயணத்தில் தனி மனிதன் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு ‘சைக்கோ’ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம் என அங்கிருந்தவர்கள் புலம்பியுள்ளனர்.

மேலும் லாஜிக் பற்றி எல்லோரும் கேள்வி எழுப்பியதிலே மிஷ்கின் சைக்கோ ஆகிவிட்டாரோ என ஐயம் எழுந்துள்ளதாக கூறிக்கொள்கின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version