ஜிதேந்திரா ஜோஷி போன்றோர் நடித்துள்ளார்கள்
பிரபல நடிகர் ஷாருக் கான் தயாரித்துள்ள பெடால் (Betaal) இணையத் தொடர், மே 24-ல் வெளியாகவுள்ளது.
த்ரில்லர் வகைத் தொடரான பெடாலை பேட்ரிக் கிரஹாம் இயக்கியுள்ளார்.
இந்த இணையத் தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வினீத் குமார், ஆஹானா கும்ரா, சுசித்ரா பிள்ளை, ஜிதேந்திரா ஜோஷி போன்றோர் நடித்துள்ளார்கள். ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் பட நிறுவனம் இதற்கு முன்பு பார்ட் ஆஃப் பிளட் என்கிற இணையத் தொடரை நெட்பிளிக்ஸுக்காகத் தயாரித்தது.
பெடால், மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. பரபரப்பான காட்சிகள் கொண்ட த்ரில்லர் தொடர், ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும் எனப் படத் தரப்பு கூறியுள்ளது