ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா போன்ற ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. படம் இயக்குவதைப்போல் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘நான் தான் சிவா’ என்ற படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். இப்படத்தை ஆர் பன்னீர்செல்வம் இயக்கி உள்ளார்.
லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோசின் மகன் வினோத் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மேலும் டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.