
அவர் மாருத்துவமனை செல்ல என்ன காரணம் என கேட்டுவந்த நிலையில்
நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் மருத்துவமனை ஒன்றில் மாஸ்க் அணிந்தபடி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பலரும் அவர் மாருத்துவமனை செல்ல என்ன காரணம் என கேட்டுவந்த நிலையில், இப்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படித்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் அவர் நேரம் செலவழித்து வந்தார். இந்நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் அஜித் மனைவியுடன் மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ வைரலானது. பலரும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறிவந்தனர்
One more latest video of #Thala #Ajith with #ShaliniAjith ?#Valimai #ThalaAjith @ajithfc pic.twitter.com/pGHffwTCE6
— Thala Army™ (@ThalaArmyOffcl) May 22, 2020
.ஆனால் இப்போது அஜித் தனது தந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அஜித்தின் தந்தை விரைவில் குணமடைவ வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.