ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய்.
ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் விஜய்.
2014-ல் நடிகை அமலா பாலைக் காதலித்துத் திருமணம் செய்தார் இயக்குநர் விஜய். எனினும் கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய்.
இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் விஜய். தனியார் மருத்துவமனையில் இன்று காலை 11.25 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார்.