அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் படங்களை இயக்கினார்கள்.
பிரேமம் படம் வெளியாகி ஐந்தாண்டுகள் கடந்துவிட்டதால், படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புதரென் பல தகவல்களை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழ்நாட்டில் கூட இந்த படத்திற்கு எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. பல மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குநர் அல்போன்ஸ் கலைஞர் டிவியில் 2010-ம் ஆண்டு வெளியான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் படங்களை இயக்கினார்கள். இதில் அல்போன்ஸ் நேரம் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தை அடுத்து தான் பிரேமம் படம் வெளியானது. இந்நிலையில் பிரேமம் படத்தின் 5-வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தை அடுத்து சமூக வலைதளங்களில் நடைபெற்ற லைவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அல்போன்ஸ் பல சுவாஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நேரம் படத்தில் முதலில் நடிக்க நடிகர் ஜெய்யை தான் ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் ஜெய் போனை எடுக்காமல் தவிர்த்தகாவும் கூறியுள்ளார். மேலும், ஜெய் வீட்டிற்கு 3 மாதங்கள் வரை அலைந்தும் பலனில்லாததால் தன்னுடன் குறும்படங்களில் வேலை பார்த்த நிவின் பாலியை தேர்வு செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் நல்ல வாய்ப்பை ஜெய் இழந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.