கல்யாணமும் செய்துகொள்ளாமல், பணத்தையும் திருப்பி தராமல்
பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில், கிருஷ்ணமூர்த்தி லே-அவுட் என்ற பகுதியில் வசித்து வந்தவர் சந்தனா. இவர் கன்னடத்தில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.. விளம்பரங்களிலும் தோன்றி உள்ளார்.
29 வயதாகிறது.. தினேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகினர், பல இடங்களிலும் சுற்றி திரிந்தனர்.. வீட்டுக்கு விஷயம் திரிந்ததும் இரு தரப்பிலுமே இவர்கள் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்கள்.
இந்த நிலையில், திடீரென சந்தனா வீட்டில் மயங்கி விழுந்தார்.. வாயில் நுரைதள்ளியபடி துடிதுடித்து கொண்டிருந்த சந்தனாவை அவரது குடும்பத்தினர் கண்டு பதறியடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், எவ்வளவோ சிகிச்சை தந்தும் சந்தனாவை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக அவரது உயிர் ஆஸ்பத்திரியில் பிரிந்தது.
இந்த தகவல் அறிந்து, சுத்தகுண்டே பாளையா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அவரது செல்போனையும் ஆராய்ந்தனர்.. அதில் ஒரு வீடியோ இருந்தது.. தற்கொலைக்கு முன்பு சந்தனா அதில் பேசியிருந்தார்.. தன்னுடைய தற்கொலைக்கு தினேஷ்தான் காரணம், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொல்லி கொண்டே விஷத்தை குடித்தார்.
இதையடுத்து, தொடர் விசாரணையில், இரு வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும், தினேஷூக்கு சந்தனாவை கல்யாணம் செய்ய விருப்பமில்லை.. இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.. மேலும், சந்தனாவிடமிருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக தெரிகிறது.. கல்யாணமும் செய்துகொள்ளாமல், பணத்தையும் திருப்பி தராமல் தினேஷ் ஏமாற்றியதால்தான் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதல்கட்டமாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
சுத்தகுண்டே பாளையா போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஆனால் சந்தனா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தஉடனேயே, தினேஷ் தலைமறைவாகி விட்டார்.. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களின் தற்கொலை தொடர்வது கலையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.