சல்மான் கானின் தந்தையாக அன்டாஸ் அப்னா அப்னா படத்தில் நடித்தார்.
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜக்தீப் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். ரமேஷ் சிப்பியின் ஷோலே படத்தில் சூர்மா வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். சல்மான் கானின் தந்தையாக அன்டாஸ் அப்னா அப்னா படத்தில் நடித்தார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் புகழை அடைந்தார்.
ஷோலே படத்தில் தான் ஏற்று நடித்த வேடத்தைக் கொண்டு ஒரு கதையை உருவாக்கி 1988-ல் சூர்மா போபலி என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ரேகா போன்றோ கெளரவ வேடங்களில் நடித்தார்கள்.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஜக்தீப்பின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.