அவர் கர்நாடக சங்கீதப் பிரியர். கலைகளை ஆதரிப்பவர். பானுமதி தன் தந்தையிடம் இருந்தே சங்கீதம் பயின்றார்.
கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த போதும் பானுமதி மிகவும் தைரியமாவர். தன் பதின்மூன்றாவது வயதில் சிறுபெண்ணாக இருக்கும்போதே 1939 ல் வெளிவந்த ‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த சினிமா தயாரிப்பின் போது தன் பெண்ணை யாரும் தொடக் கூடாது என்று அவர் தந்தை ஷரத்து விதித்தார். ஹீரோவும் தயாரிப்பாளரும் அதே போல் நடந்து கொண்டார்கள்.
பானுமதி 1943 ஆகஸ்டு 8-ம் தேதி தமிழ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டைரக்டர் எடிட்டர் ஆகிய பி.எஸ். ராமகிருஷ்ணா ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவரின் ஒரே மகன் பரணி. பரணியின் பெயரில்தான் பரணி ஸ்டூடியோ அமைத்து பல திரைப்படங்களை இந்த தம்பதிகள் தயாரித்தார்கள்.
இந்த பன்முகத் திறமைசாலிக்கு இந்திய அரசாங்கம் 1966 ல் பத்மஶ்ரீ விருதளித்து கௌரவித்தது. 2005 டிசம்பர் 24 அன்று சென்னையில் உள்ள தன் இல்லத்தில் பானுமதி ராமகிருஷ்ணா காலமானார்.
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்