போதிய பண வசதி இன்றி இன்று சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
மதுரையை பூர்வீமாக கொண்ட பாலாஜி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். வடிவேலு பாணியில் இவர் செய்த காமெடிகள் பிரபலமானதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் இரு கைகளும் வாதத்தால் முடங்கியது. இதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். போதிய பண வசதி இன்றி இன்று சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது. RIP ??
— Vivekh actor (@Actor_Vivek) September 10, 2020
நண்பன் வடிவேல் பாலாஜி ?அட்டகாசமான நகைச்சுவை நடிகன் ?நிறைய கனவுகள் ?!?! ? #VadivelBalaji #RIPVadivelBalaji comedy field miss u ??குடும்பத்திற்கு 2 குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை?? pic.twitter.com/opwOtlzpOE
— Actress Harathi (@harathi_hahaha) September 10, 2020
பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நம்மையெல்லாம் மகிழ்வித்த திறமை வாய்ந்த இளம் நடிகர், சகோதரர் வடிவேல் பாலாஜி அவர்களின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ?#RIPVadivelBalaji pic.twitter.com/1Ku47rkn4i
— A.P. Muruganandam முருகானந்தம் ?? (@apmbjp) September 10, 2020