தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன. குறிப்பாக எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தலாம் என கணக்கு போட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே, கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே சென்னையில் மக்கள் நீதிமய்யத்தின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News