ஏப்ரல் 23, 2021, 7:58 காலை வெள்ளிக்கிழமை
More

    கையில் பாம்புடன் போஸ்டர்….புதிய பிரச்சனையில் சிம்பு படம்….

    சிம்பு தனது உடல் எடையை குறித்து சிறு வயது பையன் போல் மாறியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுவது சாத்தியமில்லை என்பதால் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    இப்படத்திற்கு சிம்பு பாம்பை தனது தோளில் சுற்றிக்கொண்டு கையில் பிடித்து நிற்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், பாம்பை கையில் பிடித்து பையில் சிம்பு போடுவது போல ஒரு வீடியோவும் வெளியானது.

    simbu

    இது நிஜ பாம்பை வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இதுவே சிம்புவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலஙகு நல ஆர்வலர் ஒருவர் சென்னை வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    எனவே, இதுபற்றி சிம்புவிடம் விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Source: Vellithirai News

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,233FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,121FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-