
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு திட்டமிட்ட பாஜக நாளை திருத்தணியில் துவங்கி டிசம்பர் 6ம் தேதி தேதி திருச்செந்தூரில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்தனர்
மேலும், வேல் யாத்திரைக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா 2 வது மற்றும் 3வது அலை அச்சுறுத்தல் இருப்பதால் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளை பாஜக வேல் யாத்திரை துவங்கவிருந்த நிலையில் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாஜக தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Source: Vellithirai News