மனுஷ்மிருதி புத்தகத்தில் பார்ப்பானர்களை உயர்த்தியும் மற்ற சாதியினரை இழிவாக சித்தரிப்பதாகவும், குறிப்பாக பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாகவும் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பு புகாரை கூறினார். போராட்டமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து திருமாவிற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்வினை ஆற்றப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், திருமாவளவன் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
மனுஷ்மிருதி வழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம். அதைப்பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் இல்லை.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் ‘மனுஷ்மிரிதி வழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம். அதை பற்றி பேசுவது தேவையில்லாதது என் கருத்து. அரசியலமைப்பு புத்தகம் மீது கை வைத்தால் நான் வருவேன். ஆனால், மனுஷ்மிரிதி பற்றி விவாதிப்பது தேவையற்றது’ என அவர் கூறினார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் நல்லவர்களுடன் கூட்டணி அமைக்கும். ரஜினிகாந்தின் ஆதரவை கேட்போம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி அவர்தான் பதில் கூற வேண்டும். எங்கள் கட்சியே தமிழகத்தில் 3வது பெரிய கட்சி என அவர் தெரிவித்தார்.
Source: Vellithirai News