மாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கமல்ஹாசனின் 232வது படமாகும். இப்படம் தொடர்பான போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு தொடர்பான டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் 7ம் தேதியான நாளை கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப குழுவினர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Title announcement teaser of #kamalhaasan232 is coming this Saturday 7th nov 5pm! Need all your wishes and support 🙏🏻#KH232Title_reveal_teaser@ikamalhaasan pic.twitter.com/P8I9fterzd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 5, 2020