பெங்களூரை சொந்த ஊராக கொண்ட சனம் ஷெட்டி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் தலை காட்டியுள்ளார். சில அழகுப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலிப்பதாக கூறி, பின் நிச்சயதார்த்தம் முடிந்து தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.